For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்மாடியைப் பிடிக்க பல மாதத்தை சாப்பிட்ட சிபிஐ!

Google Oneindia Tamil News

காமன்வெல்த் போட்டிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னர் இன்று சுரேஷ் கல்மாடியை சிபிஐ கைது செய்தது. (ஏப்ரல் 25)

படு சாவாதனமாக காமன்வெல்த் ஊழல் வழக்கை விசாரித்து வருகிறது சிபிஐ. படு நிதானமாக ரெய்டுகள் நடத்தியும், மிக மிக தாமதமாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும் வர���கிறது சிபிஐ.

இந்த நிலையில் மிகப் பெரிய தாமதத்திற்குப் பின்னர் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக செயல்பட்ட கல்மாடியை ஏப்ரல் 25ம் தேதி கைது செய்தது சிபிஐ.

2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. அப்போது காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது.

கல்மாடிக்கு எதிரான ஆதாரங்களை தீவிரமாக தேடி வந்தது சிபிஐ. இறுதியில் கல்மாடிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய முடிவு செய்தது சிபிஐ.

முன்னதாக ஜனவரி 5ம் தேதி அவரை முதல் முறையாக சிபிஐ விசாரித்தது. இதையடுத்து ஜனவரி 24ம் தேதி போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிர��ந்து நீக்கப்பட்டார். ஏப்ரல் 25ம் தேதி கைது செய்யப்பட்ட கல்மாடி, ஆண்டின் முடிவு வரை ஜாமீனில் கூட விடப்படாமல் சிறையிலியே கழித்தார்.

English summary
Scams and corruption looted the nation in 2011. CWG scam is one among them. CWG organising committee chairman Suresh Kalmadi was arrested after a long delay by the CBI on April 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X