சிவசேனா தலைவர் பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே உடல்நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பால்தாக்கரே நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீரடைந்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில முக்கிய பரிசோதனகள் நேற்று தாக்கரேக்கு எடுக்கப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவுகளை இன்று மருத்துவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க வேண்டுமா? அல்லது இன்றே டிஸ்சார்ஜ் ஆவாரா எனத் தெரியவரும்.

மஹராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற கொள்கையைக் கொண்ட சிவசேனாவின் தலைவரான பால்தாக்கரேக்கு தற்பொழுது வயது 86.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The condition of Shiv Sena chief Bal Thackeray, who was admitted to Lilavati Hospital on Saturday, is said to be stable.
Please Wait while comments are loading...