For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காசி ஜெகன்னாதருக்கு காய்ச்சலாமே...!

Google Oneindia Tamil News

Varanasi Jagannathar temple
வாரணாசி: வாரணாசியில் உள்ள ஜெகன்னாதர் ஆலயத்தில் உள்ள மூலக் கடவுளான ஜெகன்னாதருக்கு அளவுக்கு அதிகமாக புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்ததால் அவருக்கு காய்ச்சல் வந்து விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து கடவுளுக்கு ஓய்வளிக்கும் வகையில் நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் முழு நிலவு தினத்தன்று புனித நீராட்டல் நடைபெறுவது வழக்கம். அன்று பக்தர்கள் அத்தனை பேரும் புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த நிகழ்ச்சி இங்கு விசேஷமானது.

சமீபத்தில் இப்படித்தான் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான குடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு நீராட்டல் நடைபெற்றது. இதனால் ஜெகன்னாதருக்கு சளி பிடித்துக் கொண்டும், காய்ச்சல் வந்தும் சிரமப்படுவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து கோவில் நடை 15 நாட்களுக்கு சாத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜெகன்னாதருக்கு குடும்ப டாக்டர் மூலிகை மருந்தைத் தயாரித்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வருகிறாராம்.

.... என்ன குழப்பமாக இருக்கா... இதெல்லாம் ஒரு சடங்குதான், கவலைப்பபடும் படியாக ஒன்றும் இல்லை. இந்தக் கோவிலில் நடைபெறும் சடங்கு நிகழ்ச்சிதான் இது.

மனிதர்களுக்கு அதிக அளவில் தண்ணீரை தலையில் ஊற்றினால் ஜலதோஷம், காய்ச்சல், இருமல் வருமோ, அதேபோல கடவுளுக்கும் வரும் என்பதாக பாவித்து இதுபோல சடங்கு செய்கிறார்கள். இதனால்தான் நடை சாத்தப்பட்டுள்ளதாம்.

English summary
The idols of Lord Jagannath and siblings Balram and Subhadra were given a sacred bath before they were closed for public viewing at Jagannath Temple in Asi area in the city on Wednesday. As per the tradition, Lord Jagannath and his siblings fall ill after the sacred bath, exactly a fortnight before the start of three-day Rathyatra festivity in the city. The public viewing and worshipping of idols of these deities is prohibited, as they are given a special prasad including juices of vegetables and other formulations that have medicinal and therapeutic values to help them recover from illness in 15 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X