குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த்சிங் போட்டி: அத்வானி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jaswant Singh
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த்சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் ஜஸ்வந்த்சிங் அல்லது நஜ்மாஹெப்துல்லாவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ஒருமனதாக ஜஸ்வந்த்சிங்கை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.அத்வானி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங் போட்டியிடுவார் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஹமீத் அன்சாரியை எதிர்த்து களம் இறங்குகிறார் ஜஸ்வந்த்சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+