For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி மீண்டும் தாமதமாகிறது!

By Mathi
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அணு உலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெறுவதால் அணுமின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டு மின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் போராட்டம் ஒடுக்கப்பட்டு மின்சார உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் தொடங்கின. ஆனால் உரிய சோதனைகள் முடிவடையாததால் மின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் அப்படி எதுவும் தொடங்கப்படவில்லை.

பின்னர் பொங்கல் மற்றும் குடியரசு தினங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அனேகமாக பிப்ரவரியில்தான் மின் உற்பத்திக்கான சாத்தியம் இருப்பதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் கூறியுள்ளன..

அப்ப இனி 15 நாள் கெடு கிடையாது?

English summary
The commercial operation of the controversial Kudankulam Nuclear Power Project (KNPP) has been delayed further and is expected to commence next month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X