For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல்: நாம் தமிழர் கட்சியினர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்த நிலையில் வரும் 8ம் தேதி அவர் திருப்பதிக்கும், புத்தகயாவிற்கு வருகை தர உள்ளார் இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து மறியல் செய்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இதேபோல் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய சேலம் பார் அசோஷி யேஷன் உறுப்பினர்கள், வழக்குரைஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று கூறியதற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

English summary
Many Naam Thamizhar cadres were arrested in Ramnad after staging contest against the visit of Rajapakshe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X