For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலாவுக்கு அழகான பெயர் சொல்லுங்களேன்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் சில காலத்திற்கு முன்பு வரை கிரகமாக திகழ்ந்து வந்த ப்ளூட்டோ பின்னர் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டது. தற்போது அதை ட்வார்ப் பிளானட் என்று அழைக்கின்றனர்.

ப்ளூட்டோவைச் சுற்றிலும் 5 துணைக்கோள்களை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ப்ளூட்டோ உடன் 5 துணைக் கிரகத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது ரஷ்ய பொம்மை போல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய நிலவு

மிகப்பெரிய நிலவு

ப்ளூட்டோவின் மிகப் பெரிய நிலாவின் பெயர் செரன். இது 648 மைல் தூரத்தில் உள்ளது. இதை 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

நிக்ஸ் மற்றும் ஹைடிரா

நிக்ஸ் மற்றும் ஹைடிரா

மற்றொரு கிரகத்தை நிக்ஸ் 20 மைல் தொலைவிலும், ஹைட்ரா 60 மைல் தூரத்திலும் உள்ளது. இந்த இரண்டும் 2005ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு நிலாக்கள்

இரண்டு நிலாக்கள்

கடந்தாண்டு 4வது துணைக்கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது நிலவும் ப்ளுட்டோவைச் சுற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலாக்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

புராண பெயர்கள்

புராண பெயர்கள்

இந்த இரண்டு நிலாக்களுக்கும் பெயர் சூட்டும் போட்டியை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரேக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 25 கடைசி தேதி

பிப்ரவரி 25 கடைசி தேதி

இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

English summary
Astronomers have launched a campaign asking the public for suggestions to name the two moons of Pluto, discovered over the past two years.Pluto is the Roman equivalent of the Greek’s Hades, lord of the underworld, and its three bigger moons have related mythological names: Charon, the ferryman of Hades; Nix for the night goddess; and the multi-headed monster Hydra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X