For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பர்கரில் குதிரை இறைச்சி: ஜெர்மனி வரைக்கு விற்பனையானதாக புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பர்கரில் குதிரை இறைச்சியை கலந்து விற்பனை செய்த விவகாரம் ஜெர்மன் வரை சென்றுள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.

பர்கரில் மாட்டுக்கறிக்கு பதிலாக குதிரை இறைச்சியை வைத்து விற்பனை செய்த சம்பவம், பிரிட்டனிலும், பிரான்சிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குதிரை இறைச்சி வைக்கப்பட்ட பர்கர் ஜெர்மன் நாட்டுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே சமயம் இது தவறுதலாக முகவரித்தாள் ஒட்டப்பட்ட பிரச்சனைதான் என்றும் கூறினர்.

இந்த முகவரித்தாளுடன் கூடிய உணவுப் பொருட்கள் வடக்கு ரைன் வெஸ்ட் ஃபேலியர் மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை இந்தப் பொருட்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் மற்ற கடைகளிலும் விநியோகிக்கப்பட்டன. இப்பொருட்களை லக்சம்பெரிகைச் சேர்ந்த ஒருவர் பல கடைகளுக்கும் இதனை விநியோகித்தார்

இந்தப் பொருட்கள் கடைகளிலிருந்து அகற்றி விட்டனரா என்பதை அதிகாரிகள் சோதனை மூலம் உறுதி செய்து வருகின்றனர் என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வேறு எங்கும் இந்த உணவுப் பொருளை விற்கக்கூடாது என்று கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
The European horsemeat scandal arrived in Germany this week with the discovery of mislabeled quantities in frozen lasagne and other goods. On the editorial pages, the country's newspapers take a critical look at the scandal and how consumers helped create it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X