For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடா: புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 நோயாளிகள் பரிதாப பலி

Google Oneindia Tamil News

டொராண்டோ: கனடாவில் உப்பு தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டதால் சென்ற ஆண்டில் மட்டும் 150 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியா மற்றும் நியுவரப்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள 5 ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயாளிகளில் பலர் திடீரென இறந்து விட்டனர்.

அவர்கள் அனைவரும் நோய் முற்றிய நிலையில் இறக்கவில்லை. இடையிலேயே திடீரென இறந்தனர். எனவே சிகிச்சை முறையில் ஏதோ கோளாறு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது..

அதில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு மருந்தில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் மருந்தில் உப்பு நீரை கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்பி இருந்தது தெரிய வந்தது. இந்த மருந்தை சாப்பிட்டதால் தான் நோயாளிகள் விரைவாக இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 பேர் இவ்வாறு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Patients taking the commonly used cancer drug Avastin could be at risk of developing flesh-eating disease, Health Canada is warning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X