For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஆக.15-க்கு பின்னரே தொடங்க வாய்ப்பு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பின் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை மூன்றாவது வாரத்தில் கூடி, ஒரு மாத காலத்திற்கு நடக்கும். ஆனால் இந்த ஆண்டு, இம்மாதத்தில், மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. கூட்டத்தொடர் குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் ஆகஸ்ட் 15க்கு மேல் கூட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தொடரில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா, இன்சூரன்ஸ் மசோதா, ஓய்வூதிய மசோதா, கம்பெனிகள் மசோதா மற்றும் நேர்முக வரிகள் குறியீடு மசோதா உட்பட, பல முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டு உள்ளது

தாமதத்திற்கு காரணம்

"உணவு பாதுகாப்பு மசோதா, அவசர சட்டமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வெகு விரைவில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்டினால், அது எதிர்க்கட்சிகளுக்கு, அரசை விமர்சிக்க, நல்ல வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, செப்டம்பர் முதல் வாரத்தில், மழைக்கால கூட்டத்தொடரை கூட்டலாம்' என, அரசு தரப்பில் ஒரு பிரிவினர் விரும்புகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் டில்லி மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தேர்தல் பிரசாரத்திற்கு போதுமான அவகாசம் வேண்டும் என்பதால், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை சீக்கிரமே முடிக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே ஆகஸ்ட் மாதம், 15ம் தேதிக்குப் பின், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gifஅப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உணவு பாதுகாப்பு மசோதா போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

English summary
With ordinance promulgated on the Food Security Bill, Monsoon Session of Parliament is now expected to be convened only after August 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X