For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எப்பப் பார்த்தாலும் பேஸ்புக்கிலேயே விழுந்து கிடக்கிறீர்களா.. அப்படீன்னா நீங்க இப்படியாயிருவீங்களாம்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஃபேஸ்புக்கால் மனதளவில் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

ஃபேஸ்புக் மோகம் மக்களை பிடித்து ஆட்டுகிறது. சிலர் இனி நான் ஃபேஸ்புக்கிற்கே போக மாட்டேன் என்று கூறி வெளியே வருகின்றனர். ஆனால் அவர்களால் ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அதனால் மீண்டும் அதை பயன்படுத்துகின்றனர்.

பிரபலங்கள் முதல் பாமரன் வரை கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். அதில் நான் தூங்கி எழுந்துவிட்டேன், பிரஷ் பண்ணுகிறேன், குளிக்கப் போகிறேன், டிரஸ் பண்ணுகிறேன் என்று தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் அப்டேட் பண்ணுகின்றனர். இப்படி ஓயாமல் அப்டேட் பண்ணுகிறவர்களால் பிறர் எரிச்சல் அடைகின்றனர்.

ஒரு நாளைக்கு 81 நிமிடங்கள்

ஒரு நாளைக்கு 81 நிமிடங்கள்

பெண்கள் ஒரு நாளை 81 நிமிடங்களும், ஆண்கள் 64 நிமிடங்களும் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

சுயமரியாதை

சுயமரியாதை

ஃபேஸ்புக்கை பயன்படுத்துவர்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சுயமரியாதை குறைவு, ஏக்கம், தூக்கம் இன்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறதாம்.

நாம் நன்றாக இல்லையோ

நாம் நன்றாக இல்லையோ

ஃபேஸ்புக்கில் யாராவது போட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பெண்களும், ஆண்களும் நாம் அவர்களைப் போன்று நன்றாக இல்லையோ என்று நினைக்கின்றனராம்.

பொறாமை

பொறாமை

நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் வீடு, கார் வாங்கியிருக்கிறேன், குழந்தை பிறந்திருக்கிறது, ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது, புதிய வேலை கிடைத்திருக்கிறது, சுற்றுலா சென்றோம் என்று அப்டேட் செய்வதைப் பார்த்து மக்களுக்கு பொறாமையும், ஏக்கமும், முரட்டுத்தனமும், தன்னைத் தானே அதிகம் ரசித்துக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறதாம்.

தவறான நட்பு

தவறான நட்பு

ஃபேஸ்புக்கில் ஆணும், பெண்ணும் நட்பாகி அது காதலாகி இறுதியில் நேரில் சந்தித்து பிரச்சனையில் முடிந்த கதைகள் பல உண்டு.

English summary
Facebook users will have behavioural problems including low self esteem, increased narcissim, aggressive behaviour and sleeping problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X