For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக பெண் பிரமுகர் பால் மலர் கொலை வழக்கு என்னாச்சு??

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Murdered DMK woman functionary's husband seeks CBI probe
சென்னை: திமுக பெண் பிரமுகர் பால்மலர் கொலை வழக்கு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கொலை வழக்கை போலீஸார் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற பால்மலர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கே.கே.நகர் பகுதி மகளிர் அணி செயலாளராக இருந்தவர் பால்மலர் (28). இவருக்கு குமாரவேல் என்ற கணவரும் யோகேஸ்வரன் (ப்ளஸ் ஒன் படித்து வருகிறார்) என்ற மகனும், நிவேதா (பத்தாம் வகுப்பு) என்ற மகளும் உள்ளனர்.

திமுகவில் அடிமட்ட தொண்டராக வாழ்க்கையை தொடங்கிய பால்மலர் திமகு பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் எந்நேரமும் போனில் பேசும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தாராம்.

திமுக கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்றார். ஸ்டாலினுடன் பால்மலர் நெருக்கமாக இருப்பது கட்சியில் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர் வீடு திரும்பவில்லை. அதன்பின் கை, கால்ல்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டைக்குள் மணிமங்கலம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தார்.

காஞ்சிபுர மாவட்டம் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் குமாரவேலை அழைத்து உடலை காண்பித்த போலீசாரிடம் கொலுசு, சேலை ஆகியவற்றை வைத்து தனது மனைவி பால்மலர்தான் என உறுதி செய்தார். அதன்பின் வழக்கு விசாரணையில் பால்மலர் எதற்காக கொலை செய்யப்பட்டார், காரணம் என்ன என்ற எந்த கேள்விக்கும் விடை தெரியவில்லை.

கொலைச்சம்பவத்தில் திமுக பிரமுகர்கள் கவுன்சிலர் தனசேகரன், அன்பகம் கலை ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பான பேச்சுகள் எழுந்த நிலையில் திமுக ஆட்சியில் கொலைக்கான காரணம், கொலையாளி குறித்த எந்த விபரமும் கிடைக்கவில்லை. கடைசியாக பால்மலரை கவுன்சிலர் தனசேகரன் தான் போனில் பேசினார் என்றும் அவர் அழைத்ததின் பேரில் காரில் ஏறிச்சென்றார் என்றும் அவரது கணவர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சென்னையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு குழந்தைகளுடன் இடம் மாறினார் குமாரவேல்.

அங்கு, செய்தியாளர்களிடம் பேசிய குமாரவேல் கடந்த 5ஆண்டுகளாக எனது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாமல் தினம்தோறும் தூக்கமின்றி தவித்து வருகிறேன். கொலையில் திமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என பலமுறை கூறியும் அரசாங்கம் மாறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுவரை எனது மனைவி கொலைச்சம்பவத்தில் யாரையும் கைது செய்யவில்லை. எனவே எனது மனைவி கொலைச்சம்பவத்தை சிபிஐ போலீசார் விசாரிக்க வேண்டும்என வழக்கு தொடர உள்ளேன் என்றார்.

தனது மகளை மட்டும் உடன் வைத்து கொண்டு படிக்க வைத்து கொண்டுள்ளார். மகனை விடுதியில் சேர்த்துள்ளார்.

திமுக பிரமுகர் தனசேகரனை குற்றம் சாட்டும் குமரவேல், தனது வீட்டில், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களோடு இந்த தனசேகரன் படத்தையும் சேர்த்து மாட்டி வைத்துள்ளார். இது ஏன் என்று தெரியவில்லை.

English summary
Murdered Chennai DMK woman functionary Pal Malar's husband has sought CBI probe into his wife's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X