For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் கலவரம்: நாடாளுமன்றத்தில், சிதம்பரம் பேச, பேச... சுகமாக உறங்கிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி

Google Oneindia Tamil News

டெல்லி: 3 பேரை பலி வாங்கிய காஷ்மீர் கலவரம் குறித்து காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், அதை எதையும் கவனிக்காத ஆந்திர எம்.பி ஒருவர் சுகமாக படுத்து உறங்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த வெள்ளியன்று ரம்ஜான் கொண்டாட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே உண்டான பிரச்சினையைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தால் காஷ்மீரில் 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இதுவரை 12 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வாசித்தார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்...

எனது அனுபவங்கள்...

எனது அனுபவங்கள்...

முதலில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும்' பேசினார்.

காஷ்மீர் கலவர அறிக்கை...

காஷ்மீர் கலவர அறிக்கை...

உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால், காஷ்மீர் மாநில கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார்.

தாலாட்டு...

தாலாட்டு...

தொடர்ந்து பரபரப்பாக அவை சென்ரு கொண்டிருந்த வேளையில் ப.சிதம்பரத்திற்கு பின்னால் அமர்ந்திருந்த ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி பால்வை கோவர்த்தன் ரெட்டி நன்கு உறங்கிக் கொண்டிருந்தாராம்.

என்னக் கொடுமை சார் இது...?

என்னக் கொடுமை சார் இது...?

இது எதேச்சையாக் கேமரா கண்களுக்கு சிக்கி, பொதுமக்களின் பார்வைக்கு கிடைத்து விட, நாட்டின் நலன் குறித்து நாடாளுமன்றத்தில் உரிமைக்குரல் கொடுப்பார்கள் நமது தலைவர்கள் என நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் பரிசாக அளித்துள்ளது.

English summary
The communal violence in Kishtwar in Kashmir was the focal point of Parliament today, but one MP was able to sleep through it all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X