For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இ.சிகரெட்டுக்கு அடிமையாகும் ஐ.டி இளைஞர்கள்... அதிர்ச்சி தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக புதுவித சிகரெட் ஒன்று சென்னையில் ஐ.டி ஊழியர்களிடையே புழக்கத்தில் உள்ளது. ஒரு சிகரெட் விலை 3.500 ரூபாய். ஆன்லைனின் புக் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படுகிறதாம்.

தற்போது ஐ.டி நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பி.பி.ஓக்களில் பணியாற்றும் இளைஞர்களில் சிலர் இந்த நூதன போதைக்கு அடிமையாகி வருவதாக தெரியவந்துள்ளது.

இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும் இந்த போதை கண்டறியப்படுவதில்லை என்பதால் இளைஞர்களிடையே இது அதிவேகமாக பரவி வருகிறது.

கை நிறைய சம்பளம்

கை நிறைய சம்பளம்

அதிக வருமானம் பெறும் இளைஞர்களிடையே தற்போது புதுவித போதை பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. ஐ.டி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றுவோர் மாதம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குவதால் செலவுகளை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை.

அதென்ன இ.சிகரெட்?

அதென்ன இ.சிகரெட்?

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக இ, சிகரெட் என்ற சிகரெட் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பரைஸ்டு சிகரெட் எனப்படும் இந்த இ,சிகரெட் ரீபிள் பேனா போல நீண்ட வடிவத்தில் காணப்படும்.

வெளிநாட்டு சிகரெட்

வெளிநாட்டு சிகரெட்

இந்த சிகரெட்டை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்குள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் இந்த ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் இ,சிகரெட்டை வழக்கமாக பெட்டிக்கடைகளில் வாங்குவது போல வாங்க முடியாது. ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும். இந்த சிகரெட் தரத்துக்கு ஏற்ப ஒரு சிகரெட் ரூ.3500 வரை விற்கப்படுகிறது.

நறுமண புகை

நறுமண புகை

இதில் நறுமணத்தை அளிக்கும் கேட்ரிஜ் இருக்கும். அந்த சிகரெட் பேட்டரியால் இயங்கும். அதை வாயில் வைத்து இழுக்கும்போது கேட்ரிஜ்ஜில் உள்ள நறுமணத்தோடு கூடிய புகை போன்ற மெல்லிய இழை மூச்சுக்குழலுக்குள் சென்று திரும்பும். ஆனால் புகை ஏதும் வராது.

அதீத போதை

அதீத போதை

இந்நிலையில் இந்த சிகரெட் தற்போது போதை பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. அதிகளவு நிகோடின் கலக்கப்பட்ட இ,சிகரெட்டை பயன்படுத்துவோர் கஞ்சா அடித்த போதைக்குள்ளாகின்றனர். சிலர், போதை தரும் நறுமணங்களையும் வாங்கி இ,சிகரெட் கேட்ரிஜ்ஜில் பயன்படுத்தி சிகரெட்டை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் 3 மணி நேரத்தில் தொடங்கி 7 மணி நேரம் வரை நிறை போதையில் காணப்படுகின்றனர்.

கண்டுபிடிக்க முடியாது

கண்டுபிடிக்க முடியாது

கேட்ரிஜ்ஜில் கலக்கப்படும் ‘ஜிகால்' என்ற ஒரு வகை பிளேவரில் ஆல்கஹாலில் உள்ளது போல 2 மடங்கு போதை உள்ளது. இந்த பிளேவரை இளைஞர்கள் பலர் தற்போது துணிச்சலாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போதையில் இருப்பவர்களை எவ்வித மருத்துவ பரிசோதனையிலும் கண்டறிய இயலாது என்பதால் பணியாற்றும் இடங்களுக்கும் பலர் போதையில் செல்கின்றனர்

உடல் நலத்திற்கு கேடு

உடல் நலத்திற்கு கேடு

இ. சிகரெட்டில் கார்சினோஜெனிக் என்ற மூலக்கூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆக்ரோலின், அசிட்டால்டிலைடு போன்ற மூலக்கூறுகள் இதில் கலக்கின்றன. இவை உடல் நலத்துக்கு கேடானவை. நிகோடின் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் தற்போது கிடைக்கும் சிகரெட்டில் 2 மடங்கு நிகோடின் பிளேவர் உள்ளது.

வெளி நாடுகளில் தடை

வெளி நாடுகளில் தடை

இந்த சிகரெட்டால் நன்மையை விட தீமை அதிகம் என்ற நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

உயிர்போகும் வலி

உயிர்போகும் வலி

மற்ற சிகரெட்டுகளை போல இந்த சிகரெட்டுகளை சில நொடிகளில் புகைத்து விட முடியாது. ஒரு சிகரெட் பிடிக்க முழுமையாக 10 நிமிடம் தேவைப்படும். இவ்வாறு தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு புகையே இல்லாத புகை போன்ற உணர்வை அனுபவிக்கும்போது வாய் வலி, மூச்சுகுழாயில் வலி, இரைப்பு போன்றவை ஏற்படும்.

போதையிலேயே மரணம்

போதையிலேயே மரணம்

தொடர்ந்து இந்த சிகரெட்டை பிடித்து வருவோருக்கு நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும். தற்போது கலக்கப்படும் போதை பிளேவரால் போதையிலேயே மரணம் ஏற்படும்.

English summary
An e-cigarette looks like a real cigarette, but instead of tobacco smoke, the user inhales a puff of pure nicotine delivered by heating a capsule. Nicotine - the alkaloid "active ingredient" in tobacco - acts as a stimulant and is certainly highly addictive. But it is not known to be carcinogenic. Aside from its addictive properties, nicotine can raise blood pressure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X