அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரியலூர் அனிதாவின் அண்ணனா இப்படி?.. வசந்தியிடம் வம்பிழுத்து.. கடைசியில் தட்டி தூக்கிய போலீஸ்..!

அனிதாவின் அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

அரியலூர்: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், உயிரை மாய்த்துக் கொண்டதை தமிழகம் இன்றளவும் மறக்கவில்லை.

சசிகலா புஷ்பா படுக்கையறைக்குள் “மர்ம நபர்”..விவாகரத்து கேட்கும் 2வது கணவர்.. நோட்டீஸ் அனுப்பிட்டார் சசிகலா புஷ்பா படுக்கையறைக்குள் “மர்ம நபர்”..விவாகரத்து கேட்கும் 2வது கணவர்.. நோட்டீஸ் அனுப்பிட்டார்

அதன் தாக்கமாகவே திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் நீட் தேர்வு ஒரு பிரதான இடத்தை பிடித்திருக்கிறது.. இப்போதும் நீட் விவகாரம் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

 அனிதா

அனிதா

நீட் விவகாரம் தலைதூக்கும்போதெல்லாம் அனிதாவை பற்றின பேச்சினை தவிர்க்க முடிவதில்லை.. அதேசமயம், அனிதாவின் குடும்பத்தினரை பற்றி செய்திகள் எதுவும் அவ்வளவாக வருவதில்லை.. 3 மாதங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினை அனிதாவின் அண்ணன் மணிரத்னம் நேரில் சந்தித்திருந்தார்.. குடும்பத்துடன் உதயநிதியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினையும் தந்திருந்தார்.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதை உதயநிதியே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.. "நீட்டால் உயிரிழந்த தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அவர்கள் குடும்பத்தாருடன் இன்று என்னை சந்தித்தார். அவர்களது சொந்தஊரில் தங்கை அனிதாவின் பெயரில் இயங்கி வரும் நூலகத்தை திறன் மேம்பாட்டு மையமாக தரம்உயர்த்த கோரினார். அப்பணியை இணைந்து செய்வோம் என உறுதியளித்தேன். அன்பும் நன்றியும்" என்று பதிவிட்டிருந்தார்.

 அனிதா

அனிதா

இந்நிலையில், அனிதாவின் இன்னொரு அண்ணன் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அவர் பெயர் அருண்குமார்.. இவர்தான் ஒரு பெண்ணிடம் வம்பிழுத்ததாக புகார் எழுந்துள்ளது.. செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில்... இவரது மனைவி வசந்தி.. 39 வயதாகிறது.. இவர்கள் வசிக்கும் பகுதியில்தான் அனிதாவின் குடும்பமும் வசித்து வருகிறது. அனிதாவின் இரண்டாவது அண்ணன்தான் அருண்குமார்.

 அனிதா அண்ணன் அருண்குமார்

அனிதா அண்ணன் அருண்குமார்

சம்பவத்தன்று, அந்த தெருவில் வசந்தி நின்று கொண்டு இருந்தாராம்.. அப்போது பைக்கில் அருண்குமார் அடிக்கடி வேகமாகவும் தாறுமாறாக ரவுண்டு அடித்து வந்தாராம்.. இதுபோல ஏற்கனவே பலமுறை அருண்குமார், வசந்தியிடம் வம்பிழுத்ததாக தெரிகிறது.. இதுகுறித்து சிரமம் அடைந்த வசந்தி தன்னுடைய கணவரிடம் சொல்லவும், செந்தில் அருண்குமாரை தட்டி கேட்டதாக தெரிகிறது... அப்போது கணவன், மனைவி இருவரையுமே அருண்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது...

கைது

கைது

இதில் காயமடைந்த தம்பதி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் செந்துறை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தன் ராஜ் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்துசெந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. படிப்பே குறி என்று ராப்பகலாக படித்து, சீட் கிடைக்காமல் நொந்துபோன அனிதாவின் அண்ணனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்ற அதிர்ச்சி செந்துறையை சூழ்ந்து கொண்டுள்ளது..

English summary
Neet Anithas Brother Arrested In women Violence Act near Ariyalur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X