கர்ப்பிணினு கூட பாராமல்.. தங்கையை கோடரியால் வெட்டிய இளைஞர்.. காரணம் தான் ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த ஆத்திரத்தில் சொந்த தங்கை - 4 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் உறவினரின் திருமண விழாவில் வைத்து கோடரியால் இளைஞர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது அண்ணன் பெயர் மஞ்சுநாத் (வயது 35). மீனாட்சிக்கும், உதய் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் மீனாட்சியின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு காதலை கைவிட்டுவிட்டு தாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளும்படி மீனாட்சியிடம் வலியுறுத்தினர். ஆனால் மீனாட்சி கேட்கவில்லை. திருமணம் செய்தால் காதல் மஞ்சுநாத் உடன் தான். வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதியாக இருந்தார் . இருப்பினும் குடும்பத்தினர் அவர்களின் காதலை ஏற்கவில்லை.
இதனால் ஓராண்டுக்கு முன்பு மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறி மஞ்சுநாத்தை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்கள் பெங்களூரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மீனாட்சி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே தான் மீனாட்சியின் உறவினர் வீட்டில் இருந்து அவருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டது. திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என்று மீனாட்சியிடம் அவரது உறவினர் கூறினார்.
இதையடுத்து மீனாட்சி தனது கணவர் உதய் குமாருடன் உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு சென்றார். அப்போது அங்கு மீனாட்சியின் அண்ணன் மஞ்சுநாத்தும் வந்திருந்தார். வேற்று மதத்தை சேர்ந்தவரை கரம்பிடித்த ஆத்திரம் அடங்காத அவர் கோடரியை எடுத்து அனைவரின் கண்முன்பும் மீனாட்சியை வெட்டினார்.
இதை திருமண விழாவிற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மஞ்சுநாத்தை தடுத்து அவரது கையில் இருந்த கோடரியை பிடுங்கினர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீனாட்சியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி கொப்பல் மாவட்ட எஸ்பி ராம் அரசித்தி கூறுகையில், ‛‛காயமடைந்த பெண் கொப்பல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
வேற்று மதத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து ஓராண்டுக்கு மேலாகியும் கர்ப்பிணியாக இருந்த சகோதரி மீது ஆத்திரம் அடங்காமல் திருமணவிழாவில் அனைவரின் முன்பும் இளைஞர் கோடரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications