சமூக அமைதியை சீர்குலைக்கிறார்கள்.. ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எப்போது? சித்தாரமையா பரபர கேள்வி
பெங்களூர்: சமூக அமைதியை சீர்குலைக்கும் பணியை செய்து வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கேள்வியெழுப்பியுள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை மேற்கோள்காட்டி, சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதியுதவி பெற்றதாகவும் கூறி இந்த தடையை மத்திய உள்துறை அமைச்சகம் விதித்தது. மேலும், பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய கிளை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

கண்டனமும், வரவேற்பும்..
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கருத்து தெரிவித்துள்ளன. அதே சமயத்தில், பாஜக உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் பிஎஃப்ஐ மீதான தடையை வரவேற்பதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக, பாஜக முதல்வர்களான யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை, ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோர் பிஎஃப்ஐ மீதான தடையை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

'ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுங்கள்'
இந்நிலையில், கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "சமூகத்தின் அமைதியை யார் சீர்குலைக்கிறார்களோ அவர்களுக்கு தடை விதிப்பதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். இதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. அன்றும் இன்றும் நான் கூறுவது ஒன்றுதான். வெறுப்பு அரசியலை செய்கிறவர்கள், அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பார்த்தால், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சமூக அமைதியை சீர்குலைக்கும் பணியைதான் செய்து வருகிறது. அப்படியென்றால், அந்த அமைப்பையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?" என அவர் கேள்வியெழுப்பினார்.

பசவராஜ் பொம்மை கண்டனம்
இந்நிலையில், சித்தராமையா பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சித்தராமையா பேச்சின் மூலம் காங்கிரஸுக்கும், பிஎஃப்ஐ அமைப்புக்கும் இடையேயான உறவு வெட்டவெளிச்சம் ஆகிறது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது பிஎஃப்ஐ மீதான புகார்களை திரும்பப் பெற்றார். அவர்களின் உறவுக்கு, இதற்கு மேலும் ஆதாரம் தேவையா? சித்தராமையாவின் கருத்து அர்த்தமற்றது. ஆர்எஸ்எஸ் தேசப்பற்றுள்ள அமைப்பு. தேசப்பற்றுடன் இருப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டுமா?" என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா விமர்சனம்
இதேபோல, சித்தராமையாவின் கருத்தை பாஜக மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பா விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பிஎஃப்ஐ அமைப்பு ஈடுபட்டு வந்த குற்றச்செயல்களை கருத்தில்கொண்டு அந்த அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிஎஃப்ஐ மீது எப்போதோ தடைவிதித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அந்த முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் மீது தடைவிதிக்க சித்தராமையா கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர் மனநல பாதிப்பில் உள்ளார். நாட்டுக்காக நேர்மையாக உழைக்கும் ஆர்எஸ்எஸ் மீது எப்படி தடைவிதிக்க முடியும்?" என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications