பெங்களூரில் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் மூடல்! பேச்சுலர்களின் நிலை என்ன?
பெங்களூர்: வணிக பயன்பாட்டுச் சிலிண்டர்கள் கிடைக்காததால் பெங்களூரில் இன்று முதல் ஹோட்டல்களை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஹோட்டலில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன் ஹோட்டல்களில் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வோரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரான், அமெரிக்கா- இஸ்ரோல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நிலவி வருகிறது. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் அவை தீப்பிடித்து எரிந்துள்ளது.

மேலும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றி பிற நாடுகளுக்கு கொண்டு செல்லும் கடல் வழியா ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொண்டு வந்த கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தே பெறப்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதால் சிலிண்டர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைக்காததால் ஹோட்டல்கள், உணவகங்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. பெங்களூரில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் வழங்குவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் ஹோட்டல்களை மூடுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த ஹோட்டல்களை நம்பி சாமானிய மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், பிற மக்கள் வாழ்கிறார்கள். இவர்களது அன்றாட உணவுத் தேவையில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் இந்த ஹோட்டல் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹோட்டல்களை திறக்க முடியாத நிலை உள்ளது. 70 நாட்களுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பிருக்கிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பெங்களூர் மட்டுமில்லாமல் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் கூட எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளதால் அங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹோட்டல்களிலேயே தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். தற்போது ஹோட்டல்கள் மூடலால் பேச்சுலர்களின் உணவு தேவை எப்படி பூர்த்தி செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பையில் ஹோட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், வீடுகளிலும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் காலியான பின், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் வழக்கமாக ஓரிரு நாள்களில் சிலிண்டர் விநியோகப்பட்டு வந்த நிலையில், இப்போது 8 நாள்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கள்ளச்சந்தையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதைத் தடுக்க, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் மறுமுறை புக்கிங் செய்வதற்கான கால அவகாசத்தை 21 நாள்களிலிருந்து 25-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுக்குள் வைக்க அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகளிலிருந்து எல்பிஜி வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பெங்களூரில் முடங்கும் மெட்ரோ ரயில் சேவை.. ஏப்.,5 ம் தேதி பராமரிப்பு பணி அறிவிப்பு -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications