"என்னால் முடியல.. இனியும் இங்கு இருக்க முடியாது.!" குழப்பத்தின் உச்சமாக பெங்களூர்.. இளைஞர் குமுறல்!
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரின் டிராபிக் எந்தளவுக்கு மோசம் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதற்கிடையே பெங்களூர் ஒட்டுமொத்தமாகவே மோசமாகி வருவதாகவும் அரசு உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவின் ஐடி தலைநகராகக் கருதப்படும் நகரம் பெங்களூர். இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சரி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சரி பெங்களூருக்கு அதிகப்படியான மக்கள் வருகிறார்கள். பெங்களூர் மக்கள்தொகை திடீரென இதுபோல அதிகரித்ததால் நகரம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் பிரதானமானது டிராபிக். உலகின் மிக அதிக டிராபிக் கொண்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூர் இருக்கிறது.

பெங்களூர் சாலைகள்
இதற்கிடையே பெங்களூர் நகரின் தற்போதைய நிலை குறித்து நெட்டிசன் ஒருவர் போட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வேகமான மற்றும் தொடர்ச்சியான நகரமயமாக்கல், மோசமான சாலைகள், நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் குறைந்து வரும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றால் பெங்களூர் நகரம் எந்தளவுக்கு மோசமான சவால்களைச் சந்தித்து வருகிறது என்பதை அந்த நெட்டிசன் தனது பதிவில் விளக்கியுள்ளார்..
இது தொடர்பாக அவர் தனது ரெடிட் பக்கத்தில், "பெங்களூர் என் நகரம், நான் அதை விரும்புகிறேன். ஆனால் என்னால் இதை இனியும் தாங்க முடியாது" என்ற தலைப்பில் அவர் போட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூர் நகரத்தை வாட்டி வதைக்கும் பல்வேறு சிக்கல்களையும், அங்கு வாழ்வதே எந்தளவுக்குக் கடினமாக மாறி வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
வெறுக்க வைக்காதீர்கள்
இது தொடர்பாக அவர் மேலும், "டியர் பெங்களூர் கவர்மெண்ட், இந்த நகரத்தை வெறுக்க வைக்காதீர்கள். என் வாழ்நாள் முழுவதும் நான் இங்கு தான் வாழ்ந்தேன். நகரின் ஒவ்வொரு அம்சத்தையும் நேசித்தேன். நான் வேறு எந்த நகரத்திலும் வசித்தது இல்லை. அதை நினைத்து வருத்தப்பட்டதும் இல்லை.. பெங்களூர் என் நகரம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மோசமாகி வருகிறது. பெங்களூரில் போக்குவரத்து உச்சத்திற்குப் போய்விட்டது. காற்று, நீர், மிக முக்கியமாகச் சாலைகள் என அனைத்தும் மோசமடைந்துவிட்டன.
எது ஒரு இடத்தில் மட்டும் இப்படி இல்லை.. சில்க் போர்டு முதல் மகாதேவபுரா வரை அவுட்டர் ரிங் ரோடு முழுக்க நிலைமை இப்படித் தான் இருக்கிறது. இனியும் என்னால் முடியாது. அந்தளவுக்கு டிராபிக் மோசமாகிவிட்டது. அலுவலக கார், மெட்ரோ, பேருந்து, சொந்த கார், இருசக்கரம் என அனைத்தையும் பயன்படுத்திவிட்டேன். ஆனால், எல்லாமே டிராபிக்கில் சிக்கித் தவிக்கவே செய்கிறது.
எல்லாமே மோசம்
மோசமான லேன் மேலாண்மை, சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டும்.. நெரிசல் நிறைந்த பகுதிகளைத் திறம்படக் கையாள அதிக போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.. குடிமக்களாகிய பெங்களூர்வாசிகளும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் தயவு செய்து, அரசு இதில் கூடுதலாகத் தலையிட வேண்டும். அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இதற்காகத் தானே எங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை அரசுக்குச் செலுத்துகிறோம்" என்றார்.
ஐடியா
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பெங்களூரில் நிலைமை மோசமாகிவிட்டது உண்மை தான் என்றே பதிவிட்டு வருகிறார். மக்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே சாலை பிரச்சினை தீரும் என பெங்களூர்வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள். மற்றொரு நபர், "நவி மும்பை, குர்கான் அல்லது நொய்டா போன்ற புதிய துணை நகரம் மிகவும் தேவை. எந்தவொரு நகரத்தாலும் இதுபோல திட்டமிடப்படாத வளர்ச்சியைக் கையாள முடியாது" என்று பதிவிட்டு இருக்கிறார். இதுபோல பலரும் பெங்களூர் நிலைமை குறித்துக் குமிறி வருகிறார்கள்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications