ஹிஜாப்பிற்காக தேர்வை புறக்கணித்த முஸ்லீம் மாணவிகளால் மறுதேர்வு எழுத முடியாது! கர்நாடக அரசு கறார்!
பெங்களூரு: கர்நாடக PU கல்லூரிகளில் ஹிஜாப் தடை காரணமாக செய்முறை தேர்வு எழுதாத இஸ்லாமிய மாணவிகளுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படாது என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிடப்பட்டது.
அதனை அடிப்படையாக கொண்டே தொடர்ந்து மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

ஹிஜாபுடன் சென்ற மாணவிகள் செய்முறை தேர்வெழுத அனுமதி மறுப்பு
ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடகா உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதற்கு வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததால் அவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது.

ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு வாய்ப்பில்லை
இதனிடையே முதல் தடவை செய்முறை தேர்வு எழுதாத மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்து இருந்தது. இதனால் மாணவிகள் ஆறுதல் அடைந்தனர். இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுதாத மாணவிகளுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிக்கல்
பியு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களில் 30 மதிப்பெண் செய்முறை தேர்விலும் 70 மதிப்பெண் எழுத்துத்தேர்வு மூலமாகவும் வழங்கப்படுகிறது. இதனிடையே செய்முறை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் 30 மதிப்பெண்களை மாணவிகள் இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 70 மதிப்பெண்களிலேயே தேர்ச்சிக்குறிய மதிப்பெண்களை பெற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் சர்ச்சை
இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவில் வன்முறையாக வெடித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications