பாஜக, காங்கிரசுக்கு சிக்கல்.. கர்நாடகா தேர்தலில் வாய்ப்பு கோரும் எம்பிக்கள்.. இவ்வளவு பேரா? வியப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்துக்கு இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அங்கு எம்பிக்களாக உள்ள ஏராளமானவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவலி ஏற்பட்ட நிலையில் இருகட்சிகளும் அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். மொத்தம் எவ்வளவு எம்பிக்கள் சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கேட்டனர்? அவர்களுக்கு கட்சி மேலிடம் சொன்ன அதிரடியான பதில்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது.
2023ல் மொத்தம் 9 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றாக தான் அண்டை மாநிலமான கர்நாடகா உள்ளது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செல்வாக்குடன் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது.
மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஆம்ஆத்மி கட்சிகள் தயாராகி வருகின்றன.

வாய்ப்பு கேட்கும் எம்பிக்கள்
ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் மீண்டும் இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. தற்போது அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் தேர்வு என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட தற்போது எம்பிக்களாக இருப்பவர்களும், முன்னாள் எம்பிக்களுக்கும் அதிக ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தங்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் காய்நகர்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாவேரி பாஜக எம்பி
கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி ஹாவேரி நாடாளுமன்ற தொகுதி எம்பியான சிவக்குமார் சி உதாசி(பாஜக) ஹனகல் சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் சிவக்குமாரின் தந்தை சிஎம் உதாசி எம்எல்ஏவாக இருந்தார். கடந்த 2021ல் அவர் மரணடைந்த பிறகு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் சிவக்குமார் அங்கு களமிறங்க ஆர்வமாக உள்ளார்.

விஜயாப்புரா எம்பி
அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் விஜயாப்புரா எம்பியான ரமேஷ் ஜிகஜினகி நாகதான் சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சட்டசபை தொகுதியில் தற்போதைய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோளின் மகன் போட்டியிட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர் தேவானந்த் எப் சவுகானிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அந்த தொகுதியில் போட்டியிட ரமேஷ் ஜிகஜினகி ஆர்வமாக உள்ளார்.

கொப்பல் எம்பி
அதேபோல் கொப்பல் நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்பியாக கரடி சங்கண்ணா உள்ளார். இவர் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் கொப்பல் சட்டசபை தொகுதியில் போட்டியிட முடிவு செய்து மேலிட தலைவர்களுடன் லாபி நடத்தி வருகிறார். இவர் இதற்கு முன்பு 3 முறை கொப்பல் சட்டசபை தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1994ல் சுயேச்சையாகவும், 1999ல் ஐக்கிய ஜனதாதளம் கட்சி சார்பிலும், 2009 ல் ஜனதாதளம் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் தான் மீண்டும் மாநில அரசியலில் கால்பதிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

பாஜக மேலிடம் சொன்னது என்ன?
இப்படி பாஜகவில் 3 எம்பிக்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரிய நிலையில் அதனை கட்சி மேலிடம் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் சரிவு ஏற்படும் பட்சத்தில் அது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனால் 3 பேரையும் அமைதி காக்கும்படி கட்சி மேலிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் எம்பியும் ஆர்வம்
மேலும் பெங்களூர் ரூரல் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக டிகே சுரேஷ் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் மட்டுமே காங்கிரஸில் வெற்றி பெற்றார். இவர் கர்நாடகா முன்னாள் அமைச்சரும், தற்போதைய கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமாரின் தம்பி ஆவார். இந்நிலையில் தான் டிகே சுரேசை ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வைக்க பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் டிகே சுரேசுக்கும் அதில் விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் கொடுக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் வெற்றி பெற்ற ஒரே எம்பி என்பதாலும், தேர்தல் வேளையில் அவர் தனது அண்ணன் டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதாலும் டிகே சுரேசுக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் எம்பிக்கள்
இதுதவிர காங்கிரஸ் கட்சியின் கோலார் முன்னாள் எம்பி கேஎச் முனியப்பா, சித்ரதுர்கா எம்பியாக இருந்த சந்திரப்பா ஆகியோர் சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கேட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் சார்பில் சாம்ராஜ் நகர் எம்பியாக இருந்த துருவநாராயன் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு சட்டசபை தேர்தலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஜனதாதளம் கட்சி சார்பில் மண்டியா முன்னாள் எம்பி சிவராமேகவுரா நாகமங்களா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். இதில் முன்னாள் எம்பிக்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications