பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜினாமா செய்ய ரெடியாகும் எடியூரப்பா- எந்த ஜாதிக்கு கர்நாடகா புதிய முதல்வர் பதவி? பரபரக்கும் பாஜக

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என தெரிகிறது. இதனையடுத்து புதிய முதல்வர் யார்? எந்த ஜாதிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்கிற விவாதங்கள் கர்நாடகா பாஜகவில் பரபரத்துக் கொண்டிருக்கிறது.

Recommended Video

    Yediyurappa To Resign From Karnataka CM Post? | Leaked Audio | Oneindia Tamil

    கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. இதனால் எடியூரப்பாவை மாற்றிவிட்டு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்பது கர்நாடகா பாஜகவின் சீனியர் தலைவர்கள், அமைச்சர்கள் கோரிக்கை.

    இது தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் எடியூரப்பா சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். ஆனாலும் தாம் முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவது என திரும்ப திரும்ப கூறி வந்தார் எடியூரப்பா.

    ஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி?ஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி?

    எடியூரப்பா ராஜினாமா செய்கிறார்

    எடியூரப்பா ராஜினாமா செய்கிறார்

    இந்த நிலையில் வரும் 25-ந் தேதி அரசு அதிகாரிகளுக்கு விருந்து கொடுக்கிறார் எடியூரப்பா.. அத்துடன் வரும் 26-ந் தேதி பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா பதவி விலகுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

    லிங்காயத்துகள் எதிர்ப்பு

    லிங்காயத்துகள் எதிர்ப்பு


    தற்போது அடுத்த முதல்வர் யாராக இருக்கக் கூடும்? என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. கர்நாடக அரசியலைப் பொறுத்தவரை ஜாதி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் எடியூரப்பா, லிங்காயத் ஜாதியை சேர்ந்தவர். அவரை பதவி விலக சொல்லக் கூடாது என லிங்காயத் ஆன்மீக தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    லிங்காயத்துக்கே முதல்வர் பதவி

    லிங்காயத்துக்கே முதல்வர் பதவி

    அப்படியே எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கினாலும் மீண்டும் லிங்காயத் ஜாதியை சேர்ந்த ஒருவருக்குத்தான் முதல்வர் பதவியை தர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. தற்போதைய நிலையில் பலரது பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டும் வருகிறது. இவர்களில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி ஆகியோரது பெயர் பலமாக அடிபடுகிறது.

    பிராமணருக்கு முதல்வர் பதவி?

    பிராமணருக்கு முதல்வர் பதவி?

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பிராமணர் ஜாதியை சேர்ந்தவர். 1988-க்குப் பிறகு கர்நாடகாவில் பிராமணர் ஒருவர் முதல்வராக்கப்பட்டதில்லை. அதனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிராமணரான பிரகலாத் ஜோஷ்டிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்கின்றன சில தகவல்கள்.

    சி.டி. ரவிக்கு வாய்ப்பு?

    சி.டி. ரவிக்கு வாய்ப்பு?

    பாஜக பொதுச்செயலராக இருப்பவர் சி.டி. ரவி. இவர் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்தவர். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக பொறுப்பாளராக தீவிரமாக பணியாற்றியவர். ஒக்கலிகா ஜாதி வாக்குகள் காங்கிரஸ், ஜேடிஎஸ் என்ற இரு கட்சிகளிடம் இருக்கிறது. சி.டி. ரவியை முதல்வராக்கினால் பாஜகவுக்கு ஒக்கலிகா ஜாதியினரிடத்தில் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்பது ஒரு கணக்கு.

    நீளும் பட்டியல்...

    நீளும் பட்டியல்...

    இந்த இருவர் இல்லாமல், பசவராஜ் பொம்மை, பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே, சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட் என பலரது பெயர்களும் முதல்வர் ரேஸில் இருக்கின்றன. பாஜகவைப் பொறுத்தவரை கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்தின் மூலம் சர்ச்சை வந்துவிடக் கூடாது; எந்த ஜாதி வாக்குகளும் சேதாரமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம்.

    English summary
    BJP is likely to replace Karnataka Chief Minister BS Yediyurappa with new face. Here are the BJP frontrunners List for the Karnataka CM Post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X