Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ மாலத்தீவு.. இப்போ துபாய்.. எடியூரப்பா போட்ட திடீர் ட்ரிப்.. அப்படியே ஆடிப்போன பாஜக மேலிடம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா திடீரென பெங்களூரில் இருந்து துபாய்க்கு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் துபாய்க்கு போனதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அவர் இதற்காக தேர்வு செய்த நேரம்தான் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா தேசிய மேலிடத்துடன் இருந்த கருத்து வேறுபாடு, எம்எல்ஏக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த முதல் கட்சி கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை.

அப்போதே இவரின் "ஆப்சென்ட்" பல கேள்விகளை எழுப்பியது. அப்போது இவர் மாலத்தீவிற்கு குடும்பத்தோடு பயணம் செய்தார்.

 மாலத்தீவு

மாலத்தீவு

முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சில நாட்களில் இப்படி திடீரென மாலத்தீவு சென்று எடியூரப்பா சுற்றுலா பயணம் மேற்கொண்டது பல கேள்விகளை எழுப்பியது. அதிருப்தியில் இருக்கிறாரோ எடியூரப்பா என்ற கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில்தான் பாஜக கர்நாடக நிர்வாகிகள் கூட்டம் நேற்று தொடங்கியது. பெங்களூரில் கர்நாடக மாநில தேசிய பாஜக பொறுப்பாளர் அருண் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம்

கூட்டம்

இந்த கூட்டத்திற்கான அழைப்பு பாஜகவின் மூத்த கர்நாடக உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோருக்கு சென்று இருந்தது. எடியூரப்பாவிற்கும் அழைப்பு சென்று இருந்தது. ஆனால் இதில் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. மாறாக அவர் நேரம் பார்த்து துபாய்க்கு பறந்து சென்றுள்ளார். இவரின் மகன் பி ஒய் விஜயேந்திராவும் துபாய்க்கு சென்றுள்ளார்.

முதல் கூட்டம்

முதல் கூட்டம்

கர்நாடகாவில் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றபின் முதல்முறை இந்த கூட்டம் நடக்கிறது. ஆனால் இந்த கூட்டத்தை புறக்கணித்து எடியூரப்பா துபாய்க்கு பறந்து சென்றுள்ளார். அதேபோல் மூத்த தலைவர், முன்னாள் துணை முதல்வர் சிஎன் அஸ்வத்நாராயனும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுதான் கர்நாடக பாஜக மற்றும் பாஜகவின் தேசிய மேலிடத்தை அதிர வைத்துள்ளது.

மேலிடம் அதிருப்தி

மேலிடம் அதிருப்தி

எடியூரப்பாவின் திடீர் டிரிப் காரணமாக டெல்லி பாஜக மேலிடமும், கர்நாடக பாஜகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு எதிராக எடியூரப்பா ஏதாவது திட்டம் போடுகிறாரா என்ற விவாதம் நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. ஏனென்றால் கர்நாடகாவில் எடியூரப்பா இன்றி பாஜக என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.

எடியூரப்பா

எடியூரப்பா

எடியூரப்பா பாஜகவில் இல்லாமல் பாஜக எதிர்கொண்ட கடந்த சட்டசபை தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் கூட பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த அளவிற்கு எடியூரப்பா பாஜகவில் மிகவும் வலிமை பொருந்திய தலைவர். இந்த நிலையில் கட்சி கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொள்ளாமல் துபாய்க்கு பறந்து சென்றது பல யுகங்களுக்கு வழி வகுத்து இருக்கிறது.

அருண் சிங்

அருண் சிங்

கர்நாடக மாநில தேசிய பாஜக பொறுப்பாளர் அருண் சிங் இது தொடர்பாக அளித்த பேட்டியில், கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் எண்ணம் இல்லை. எடியூரப்பாவின் பயணம் திடீரென திட்டமிட்டது இல்லை. ஏற்கனவே அவர் திட்டமிட்ட பயணம் இது. அதனால் இதில் அவர் மாற்றம் செய்யவில்லை. மற்றபடி முதல்வர் பொம்மைக்கு எதிராக கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என்று அருண் சிங் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+