இவரெல்லாம் கேப்டனா? இப்படி பேசலாமா?.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பாபர் ஆஸம்! சர்ச்சை
சென்னை: நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டன் பாபர் ஆஸம் சொன்ன காரணம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் 176/4 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 19 ஓவரிலேயே 177/5 ரன்கள் எடுத்து வென்றது.
ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் 19வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து 3 சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதனால் நாக் அவுட் சுற்றில் பாகிஸ்தான் வெளியேறியது.

பாகிஸ்தான் கேப்டன்
நேற்று போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், நாங்கள் முதல் இன்னிங்சில் திட்டமிட்டபடி ஸ்கோர் எடுத்ததாகவே நினைக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக நாம் எந்த விதமான வாய்ப்பும் வழங்க கூடாது. இன்னும் கூடுதலாக ரன் எடுத்து இருக்கலாம். இது எங்களுக்கு பெரிய அளவில் எதிராக திரும்பி உள்ளது.

திருப்பம்
ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்ட நொடி என்றால் அது அந்த கேட்ச் விடப்பட்ட தருணம்தான். அந்த கேட்சை எடுத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கே வேறு மாதிரியானதாக இருந்திருக்கும். நாங்கள் இந்த தொடர் முழுக்க நன்றாக ஆடினோம். ஆனால் ஒரு சின்ன தவறு எங்களுக்கு பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது.

கேப்டன்
நாங்கள் இந்த தொடரில் கலந்து கொண்ட விதமும், ஒவ்வொரு போட்டியிலும் ஆடிய விதமும் சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக நாங்கள் சந்தோசமாக இருக்கிறேன். நாங்கள் இந்த தொடரில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி என்று பாபர் ஆஸம் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி
பொதுவாக கேப்டன்கள் தங்கள் அணி தோல்வி அடையும் போது ஒரு குறிப்பிட்ட வீரர் மீது குற்றச்சாட்டு வைக்க மாட்டார்கள். ஒரு வீரர் கேட்ச் விட்டார் என்பதற்காக அவர் மீது அணியின் கேப்டன் பழியை போட மாட்டார். ஆனால் கேப்டன் பாபர் ஆஸம் நேற்று ஹசன் அலி மீது பழியை போட்டார். ஷாகீன் அப்ரிடி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை மேத்யூ வேட் அடித்தார்.

கேட்ச்
அதற்கு முன் முந்தைய பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் மேத்யூ வேட் கொடுத்த கேட்சை ஹசன் அலி தவறவிட்டார். இந்த நிலையில் இந்த ஒரு கேட்ச் விட்டதால்தான் ஆட்டமே மாறியதாக பாபர் ஆஸம் குற்றஞ்சாட்டி உள்ளார். பொதுவாக கேப்டன்கள் இப்படி ஒரு வீரர் மீது பழியை போட மாட்டார்கள் என்றாலும் பாபர் ஆஸம் இப்படி பேசி உள்ளார்.

குற்றச்சாட்டு
பாபர் ஆஸம் கொடுத்த இந்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இவரெல்லாம் கேப்டனா.. அணி வீரருக்கு ஆதரவு தராமல் இப்படி செய்கிறாரே என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இணையம் முழுக்க நெட்டிசன்கள் ஹசன் அலியை கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு கேப்டனாக ஹசன் அலியை சப்போர்ட் செய்யாமல் பாபர் ஆஸம் இப்படி விமர்சனம் வைத்தது சர்ச்சையாகி உள்ளது.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications