3 மநீம, தேமுதிக 8, தவாக-வுக்கு 1? வேல்முருகன் திமுகவுக்கு "ரெட் சிக்னல்".. பச்சை கொடியுடன் எடப்பாடி?
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான சலசலப்புகள் இப்போதே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன... குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக திமுகவுடன் பயணிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி, தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது... உண்மையில் அக்கட்சியினரின் வேண்டுகோள் என்ன? விருப்பம் என்ன? கோரிக்கைதான் என்ன?
பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திமுக கூட்டணியில் நீடிப்பதால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

வேல்முருகன் - தவாக
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவமானங்களை பொறுத்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என நிர்வாகிகள் கொந்தளித்தார்களாம்..
கடந்த 5 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு தீர்மானம், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தவாகவின் முக்கிய கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பது அக்கட்சியினரின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது...
மேலும், வாரிய பதவிகள் வழங்கப்படாதது மற்றும் வரும் தேர்தலில் மீண்டும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க திமுக முன்வருவது வேல்முருகன் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகவே தெரிகிறது..
மநீம , தேமுதிக திமுக கூட்டணி
அதுமட்டுமல்ல, மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை வழங்க முன்வரும் திமுக, களத்தில் தீவிரமாக பணியாற்றும் தங்களுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்ற கேள்வியை தொண்டர்கள் எழுப்புகின்றனர்... அதிலும், வட மாவட்டங்களில் பாமகவுக்கு இணையான கட்டமைப்பை வைத்துள்ள தங்களை, மற்ற சிறிய கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது நியாயமல்ல என்பதுதான் அவர்களின் வாதமாக உள்ளது..
இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன..
எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி
திமுக கூட்டணியில் விரிசல் விழுவது போன்ற பிம்பத்தை உருவாக்கவும், தனது கூட்டணியை பலப்படுத்தவும் வேல்முருகனை தங்கள் பக்கம் இழுக்க அவர் மறைமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருகாலத்தில் பாமகவில் அரசியல் எதிரிகளாக பார்க்கப்பட்ட அன்புமணி ராமதாஸும் வேல்முருகனும் தற்போது ஒரு புரிதலுக்கு வந்துள்ளதால், அவர்கள் ஒரே கூட்டணியில் கைகோர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்காது என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்..
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாம்..
திமுக தவாக கூட்டணி?
ஆனால், புதிய கட்சிகளை உள்ளே இழுக்க நினைக்கும் திமுக, ஏற்கனவே உள்ள தோழமை கட்சிகளின் உணர்வுகளை காயப்படுத்துவது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் இப்போதே அலர்ட் செய்கிறார்கள்..
எனினும், வேல்முருகன் இன்னமும் தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், வரும் நாட்களில் அவர் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது...
அதேசமயம், வேல்முருகன் போன்ற தீவிரமான பேச்சாளர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி கொண்ட தலைவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறினால், அது வட மாவட்டங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்பதை நாம் இங்கு கோடிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான்












Click it and Unblock the Notifications