Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

70 சீட் ஆஃபர், 1 துணை முதல்வர் பதவி! விஜய் போட்ட தங்கத் தூண்டிலில் விழும் கட்சி? அப்ப திமுக கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது... ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான சலசலப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நேரத்தில் தவெக பெயர் இதில் அடிபடுவது அதற்கு மேல் குழப்பத்தை தந்துள்ளது.. உண்மையில் என்ன தான் நடக்கிறது?

திமுக-காங்கிரஸ் ஏன் இன்னும் இறுதியாகவில்லை. நீண்டகால நட்பு சக்தியாக விளங்கி கொண்டிருக்கும் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி செய்யப்படாதது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது..

TVK Congress Vijay DMK TN Election 2026

திமுக காங்கிரஸ் கூட்டணி

அதிக சீட், கூட்டணி ஆட்சி , அதிகாரத்தில் பங்கு போன்ற விவகாரங்களை தமிழக காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரிதான் இப்படியான கோரிக்கையை அன்று கிளப்பிவிட்டவர்... இதற்கு பிறகு வந்த செல்வப்பெருந்தகை அதே விஷயத்தை கெட்டியாக பிடித்து கொண்டு, திமுக அரசை விடாமல், தன்னுடைய கோரிக்கைகளால் நெருக்கி தள்ளி வருகிறார்...

இதுபோக, மதுரை திமுக நிர்வாகிகளின் கொந்தளிப்பும், கோபமும் காங்கிரஸ் மீது அப்பட்டமாகவே வெளிப்பட்டதை கடந்த வாரத்தில் பார்க்க முடிந்தது..

கனிமொழி - ராகுல் காந்தி சந்திப்பு

வார்த்தை மோதல்கள் இரு கட்சிகளிலும் வெடிக்க துவங்கியதால், நிலைமையை சமாளிக்கவும், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் திமுக எம்.பி. கனிமொழி, டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்..

அப்போதுகூட கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வருகை தந்து, திமுக தரப்புடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கோருவதோடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. ஆனால், திமுக தலைமை இதனைத் தீர்க்கமாக மறுத்து வருவதால் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு பெருகி கொண்டே செல்வதாக தெரிகிறது..

30 சீட் தருமா திமுக

திமுக கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 120 இடங்களிலாவது தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால்தான், காங்கிரஸுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை 30-க்குள் சுருக்கப்படலாம் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.

தவெக - காங்கிரஸ் கூட்டணி

இது ஒருபுறமிருக்க, கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளும் கூடுதல் இடங்களை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கடந்த முறை இரட்டை இலக்க வெற்றியை நெருங்கிய விசிக, இந்த முறை கூடுதல் தொகுதிகளை கோருவது திமுகவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில்தான், நடிகர் விஜய்யின் தவெக, அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரலை எழுப்ப தொடங்கியுள்ளனர்.

70 சீட், 6 அமைச்சர் பதவி

ராகுல் காந்தி மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் விஜய்யுடன் தொடர்பில் இருப்பதாக வெளியாகும் செய்திகள், திமுக கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதாவது 70 சீட், 6 அமைச்சர் பதவி, 1 துணை முதல்வர் பதவி என்றெல்லாம் காங்கிரசுக்கு தவெக ஆஃபர்களை தந்துள்ளதாம்..

அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள், தென்னிந்தியாவில் தனது பிடியை வலுப்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சிக்கு விஜய்யின் தவெக ஒரு பாலமாக இருக்கும் என்றும், விஜய்யும் காங்கிரஸுடன் இணைய விருப்பம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆஃபர்கள் - தங்கமான வாய்ப்பு

தற்போதைய நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்று மேலிடத் தலைவர்கள் உறுதி அளித்தாலும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்படும் இழுபறி காங்கிரஸை மாற்று சிந்தனைக்குத் தூண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினருக்கும் கனிமொழி தரப்பிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் என்று தெரிகிறது...

அதுமட்டுமல்ல, வாக்குகள் சிதறுவதுடன், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்கு வங்கியை ஒருசேர இழக்கும் அபாயம் திமுகவுக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதையும் இங்கு நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.

மொத்தத்தில் திமுக தனது வாக்கு வங்கியை தக்கவைக்கப் போராடும் அதே வேளையில், தவெகவின் அழைப்பு காங்கிரஸுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பாக தெரிவது தமிழக தேர்தல் களத்தை ஒரு மும்முனைப் போட்டியை நோக்கி நகர்த்துகிறது... என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+