Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி தாக்குதல்!" ஓபிஎஸ் மீது போலீசில் புகார்! உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    ADMK தலைமை அலுவலகத்தில் OPS - EPS ஆதரவாளர்கள் இடையே மோதல்... ராயப்பேட்டையில் பரபரப்பு

    அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தற்காலிக பொதுச்செயாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அடுத்த 4 மாதங்களில் பொதுச்செயாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் பொதுச்செயாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. இவை எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை முதலே பெரும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. எடப்பாடி பழனிச்சாமி வானகரம் சென்ற நிலையில், அதற்குப் போட்டிப் போடும் வகையில் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி ஓ. பன்னீர் செல்வம் வாகனம் சென்றது.

    பதற்றம்

    பதற்றம்

    அப்போதே ஓபிஎஸ் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அவ்வை சண்முகம் சாலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே கற்கள் வீசி தாக்குதல் நடத்தி இருந்ததால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதையடுத்து அங்கு அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

     கற்கள் வீச்சு

    கற்கள் வீச்சு

    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தை உள்ளே விட மறுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தகராறு செய்தனர். ஒருகட்டத்தில் இது தள்ளுமுள்ளாக மாறி, வன்முறையும் ஏற்பட்டது. பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தை உடைத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். மேலும், தொண்டர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர்.

    புகார்

    புகார்

    இந்தச் சூழலில் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது. அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் அங்குச் சற்று சலசலப்பு உருவாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+