அமித்ஷா வைத்த கண்.. முக்கிய புள்ளியின் திடீர் ‘என்ட்ரி’.. பிளான் போட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்.. நடக்குமா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக அமித்ஷாவை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படாவிட்டாலும் பாஜகவுக்கு நெருக்கமான முக்கிய புள்ளி ஒருவர் ஈபிஎஸ், ஓபிஎஸ் விவகாரம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து நிச்சயம் பேசுவார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
பிரதமர் மோடி, இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரை செல்கின்றனர்.
அதேசமயம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு 11 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை வரும் அமித்ஷா, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அமித்ஷாவை சந்தித்துப் பேசுவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே நேரம் கேட்டுள்ளனராம். அமித்ஷா தங்கியிருக்கும் ஹோட்டலில் இருவருமே தனித்தனியாகச் சந்தித்து அதிமுக விவகாரம் குறித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மோடி
திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, இன்று நடக்கிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திண்டுக்கல் வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர்.

2 பேரும் - முன்னே பின்னே
அதேபோல அ.தி.மு.கவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பிரதமர் மோடியை மதுரையில் வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இருவருமே சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை செல்கின்றனர். மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியையும், திண்டுக்கல்லில் இருந்து மதுரை வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கேள்விக்குறி
அதிமுகவில் கடந்த 5 மாதங்களாகவே பிரச்னைகள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில், இருவருமே பாஜகவின் ஆதரவைப் பெற முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் வரும்போது இருவரையும் பிரதமர் மோடி சந்திக்க இருப்பது அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும், அதிமுக பிளவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் இருவரிடமும் பேசுவாரா அல்லது வேறு முக்கியத் தலைவர்களிடம் பேசிக்கொள்ளுமாறு அறிவுறுத்துவாரா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அமித்ஷா ட்ரிப்
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகம் வர இருக்கிறார். இன்று இரவு 11.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார் அமித்ஷா. நாளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்கிறார். இதற்காக அமித்ஷா இன்று இரவே சென்னை வருகை தருகிறார். சென்னையில் ஆர்.ஏ. புரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார் அமித்ஷா. நாளை காலை 10:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.55க்கு விழா நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு செல்கிறார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை
சென்னையில் இன்று இரவு அமித்ஷா பாஜகவின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து பேசுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், தமிழ்நாட்டின் அரசியல் நடப்புகள் குறித்தும் அமித்ஷா, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அமித்ஷா கார் செல்லும் காமராஜர் சாலை, வாலாஜா சாலை முழுவதும் பாஜக தொண்டர்கள் திரண்டு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஓபிஎஸ், ஈபிஎஸ் திட்டம்
சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து செயல்படுமாறு ஏற்கனவே பாஜக தலைமை அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுவதால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் தனித்தனியாக சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்தித்தால் நிச்சயம் இருவரையுமே சந்திப்பார், யாரையும் ஒதுக்கி வைக்க மாட்டார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

அமித்ஷா கண் - ஒற்றுமை
இருவரையும் சந்திக்க அமித்ஷா நேரம் கொடுத்தால், நிச்சயமாக, அதிமுக - பாஜக கூட்டணி பற்றியும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்தும் முக்கியமான ஆலோசனைகளை அமித்ஷா வழங்குவார் எனக் கூறப்படுகிறது. அப்போது அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்றால் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் அமித்ஷா அறிவுறுத்துவார் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தென் மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா, ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைப்பை வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

நெருங்கிய முக்கிய புள்ளி
இருவருக்குமே நேரம் வழங்கப்படவில்லை என்றால் வேறொரு முக்கியமான சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளில் இருந்து டெல்லிக்கு பாலமாகச் செயல்படும் பாஜகவுக்கு நெருக்கமான முக்கிய புள்ளி, அமித்ஷாவை சந்தித்து, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் தரப்புகளின் கருத்துகளையும் தெரிவிப்பார் என்றும், அது தொடர்பாக அமித்ஷாவின் முடிவைக் கேட்டு, உரியவர்களிடம் அதைத் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால், அமித்ஷாவின் சென்னை வருகை ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications