ABP survey: திமுக கூட்டணி 170+ இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்குமாம்! பரபரக்கும் சர்வே!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஏபிபி சர்வே கணித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

திமுக 164 இடங்களிலும் அதிமுக 167 இடங்களிலும் தவெக 233 தொகுதிகளிலும் (எடப்பாடி தொகுதி வேட்பாளர் நிராகரிப்பால்) நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுகிறது.
இந்த தேர்தலில் திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. அதிமுகவோ ஆட்சியை பிடிக்க தீவிரம்காட்டி வருகிறது. இவர்களை தவிர்த்துவிட்டு தவெக, நாம் தமிழர் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என சூளூரைத்து வருகிறார்கள்.
வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மக்களிடம் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய பெரும்பான்மையாகும். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பலமான கூட்டணிக் கட்டமைப்பு ஆகியவை திமுகவுக்குப் பெரும் பலமாக உள்ளன.
2019 மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ச்சியாக அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் திமுக, தனது செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருப்பதை இந்தக் கணிப்பு காட்டுகிறது.
அதிமுக 50 முதல் 58 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிப்பு கூறுகிறது. கடந்த தேர்தலை விட இது சற்றே குறைந்த எண்ணிக்கையாகக் கருதப்படலாம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க இன்னும் கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இது உணர்த்துகிறது. பலமுனைப் போட்டிகள் நிலவும் சூழலில், அதிமுகவின் வாக்கு வங்கியில் மற்ற கட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே 4 முதல் 6 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் இது சிறியதாகத் தெரிந்தாலும், ஒரு புதிய கட்சி திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில் இடம்பிடிப்பது சாதாரணமானதல்ல.
இந்த 4-6 இடங்கள் என்பது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக-வுக்கு எந்தளவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று நிலவும் சூழலை மட்டுமே பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் போது இந்த எண்களில் மாறுபாடு இருக்கலாம். இருப்பினும், தற்போதைய நிலையில் திமுக கூட்டணி மிகவும் வலுவான முன்னிலையில் இருப்பதையும், புதிய கட்சிகளின் வருகை தமிழக அரசியலில் ஒரு மெல்லிய மாற்றத்தைத் தொடங்கியிருப்பதையும் ஏபிபி சர்வே சுட்டிக் காட்டுகிறது.
-
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு தந்த "62 பரிசு"? கூட்டணி கட்சிகளுக்கு வேட்டு? சிக்ஸர் அடிக்குதா திமுக -
சின்ன தோசை தந்த திமுக.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
பணிந்தார் கமல்ஹாசன்.. விருப்பமனு கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
வானில் தோன்றிய உருவம்.. பழைய ஆம்பாசிடர் காரில் விஐபி!தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சென்ட்டிமெண்ட் -
காட்பாடி சங்கீதாவுக்கு சங்கடம்.. 2 தொகுதியில் வேட்பு மனு.. இப்ப துரைமுருகன் குடும்பத்துக்கு ட்விஸ்ட் -
ஆடு 1000.. எருமை 55,000, மனுஷன் விலை இவ்வளவுதானா? சீமான் வெளியிட்ட அதிர்ச்சி கணக்கு! #Election2026 -
மக்கள் நீதி மய்யத்தில் ஒரு 'வசூல்ராஜா'! அந்த ரூ. 30 லட்சம் வளர்ச்சி நிதிக்கு! கறார் காட்டினாரா கமல்? -
கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள் -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை












Click it and Unblock the Notifications