20 முறை தற்கொலை எண்ணம் வந்தது.. என் வாழ்க்கையை "இந்த" நடிகர்கள் காப்பாற்றினாங்க.. பொன்னம்பலம் பகீர்
சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் பொன்னம்பலம் இதுவரை 20 முறை தற்கொலை செய்யலாம் என தனக்கு எண்ணம் வந்ததாக பகீர் தகவலை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், வில்லன், ஸ்டன்ட் நடிகர், இயக்குநராக அறியப்பட்டவர் பொன்னம்பலம். இவர் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். பின்னர் வால்டர் வெற்றி வேல் படம் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது.
இதுவரை சண்டைக் காட்சிகளில் இவருக்கு காயமோ எலும்பு முறிவோ ஏற்படாததால் இவரை ஸ்பேர் பார்ட்ஸ் என்றே அழைப்பார்கள். பின்னர் பல்வேறு திரைப்படங்களில் மிரட்டும் வில்லனாக நடித்திருப்பார்.

நாட்டாமை
இவர் 1994 ஆம் ஆண்டு நடித்த நாட்டாமை திரைப்படம், 1995 இல் முத்து, 1999 இல் அமர்க்களம் ஆகிய படங்கள் திரைத்துறையில் பொன்னம்பலம் காலூன்ற வழிவகுத்தன. இதன் பிறகு பொன்னம்பலம் சில படங்களில் நடித்திருந்தார். தமிழ் படம், வேங்கை, பொன்னர் சங்கர் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இவர் நடிக்கவில்லை.

பிக்பாஸ்
அதாவது 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில்தான் 2018ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு பெண் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, மமதி சார, மும்தாஜ் ஆகியோரை விமர்சித்து பேசி வந்ததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அரசியல் பயணம்
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார், கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்தார். இதையடுத்து 2017ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி மத்திய அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைந்தார்.

சிறுநீரக செயலிழப்பு
தற்போது கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது சிகிச்சைக்கு உதவுமாறு முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில் சரத்குமார் கடந்த 6 ஆண்டுகளாக இவருடைய மருத்துவ செலவுகளை ஏற்று வருகிறார். அது போல் நடிகர் தனுஷும் பொன்னம்பலத்திற்கு உதவிகளை செய்து வருகிறார்.

பொன்னம்பலம்
இந்த நிலையில் பொன்னம்பலம் அண்மையில் அளித்த பேட்டியில் உடல்நிலையும் சரியில்லை, மருத்துவத்திற்கும் பணம் இல்லை. சம்பாதித்த காசை வைத்து சேர்த்தும் வைக்காமல் சொத்தும் வாங்கி போடவில்லை. இதனால் மன விரக்தி அடைந்து 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணம் வந்தது. இதையடுத்துதான் முன்னணி நடிகர்களிடம் உதவி கேட்டேன்.

விஜயகாந்த்
விஜயகாந்த் எனக்கு மிகவும் பிடித்தவர். அவரை மட்டும் நான் நேரில் பார்த்தால் அப்போதே என் உடல்நிலை மேலும் பாதித்து இறந்துவிடுவேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார். தனது காமெடி கலந்த வில்லனத்தனமான நடிப்பால் மக்களை மகிழ்வித்த பொன்னம்பலத்தின் உடல்நிலை விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்களும் பொதுமக்களும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications