Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cரிச்சா சிவன்டா மொறச்சா Mன்டா.. தளபதியை போஸ்டர் முதல்வர் ஆக்கிய ரசிகர்கள்! உட்கார்ந்து யோசிப்பாங்களோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களால் தளபதி என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று என்பதால் அவரது ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுவாரசிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் விஜய்க்கு பல சுவாரஸ்யமான அடைமொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் சி.எம்.

நடிகர் விஜய்க்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் படையைக் கொண்டவர் விஜய்.

வழக்கம்போல், கடந்த கொரோனா காலத்திலும் நலத்திட்ட உதவி, உணவு வழங்குதல் என பல்வேறு சமூக பணிகளை மேற்கோண்ட ரசிகர்கள், தற்போது பிரம்மாண்டமாக அன்னதானம், ரத்த தான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

மேலும் பெரிய பேனர்கள், போஸ்டர்கள், திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோக்கள் என களைகட்டி வருகிறது நடிகர் விஜய்யின் பிறந்தநாள், அதேபோல் டுவிட்டரிலும் ஸ்பெஷல் DPக்கள் பிரபலங்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொடங்கி ட்விட்டர் ட்ரெண்டிங் வரை லட்சக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் என்றால் போஸ்டர் இல்லாமலா? ஆயிரக்கணக்கில் செலவு செய்து தங்கள் தலைவனை வாழ்த்தும் வகையிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் நகரின் முக்கிய இடங்களை விஜய் ரசிகர் மன்றத்தினர் ரசிகர்களும் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் ரசிகர்கள்

திண்டுக்கல் ரசிகர்கள்

நேற்று மதுரையில் களங்கமில்லா ஒற்றை தலைமையே என்ற வாசகத்துடன் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்பதுபோல திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

போஸ்டரிலும் பிரம்மாண்டம்

போஸ்டரிலும் பிரம்மாண்டம்

"Cரிச்சா சிவன்டா மொறச்சா Mன்டா.. " என மாஸான பஞ்ச் டயலாக்கோடு, "CM" என குறிப்பிட்டுள்ளனர். அதாவது தளபதியை தமிழகத்தின் முதல்வர் என குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரம்மாண்ட போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் வித்தியாசமாக ஒட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+