ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன?
சென்னை: கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் 'அதானி டோட்டல் கேஸ்' (Adani Total Gas) பங்குகள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. கேஸ் சிலிண்டர் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் அதிகரித்துள்ளன. இன்று ஒரே நாளில் சுமார் 10% வரை உயர்ந்து முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ள இந்தப் பங்கின் ஏற்றத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணிகளை அலசுவோம்.

என்ன நடக்கிறது சந்தையில்?
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் இயற்கை எரிவாயு விநியோகப் பிரிவான 'அதானி டோட்டல் கேஸ்' பங்குகள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28% க்கும் மேல் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. இன்றைய வர்த்தக நேரத்தின் முடிவில், ஒரு பங்கின் விலை ₹622.75 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 9) இப்பங்கு தனது 52 வார கால குறைந்தபட்ச விலையான ₹462.80-ஐத் தொட்டது. அங்கிருந்து மீண்டு வந்து தற்போது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திடீர் ஏற்றத்திற்கு 3 முக்கிய காரணங்கள்:
1. எரிவாயு தட்டுப்பாடும் அதீத தேவையும்:
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, இயற்கை எரிவாயுவுக்கான தேவை விண்ணைத் தொட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பிஎன்ஜி (PNG) மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி (CNG) விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேவை அதிகரிப்பே அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.
2. மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியல் சூழல்:
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வரும் எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. நிறுவனத்தின் வெளிப்படையான அறிக்கை:
நேற்று (மார்ச் 11) பங்குச் சந்தை வெளியீட்டில் அதானி டோட்டல் கேஸ் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழலால் தற்காலிகமாக விநியோகம் பாதிக்கப்பட்டாலும், அதைச் சமாளிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளையும், ரிஸ்க் மேனேஜ்மென்ட் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தை நிலவரம் - ஒரு பார்வை:
சந்தை மதிப்பு: ₹68,292.71 கோடி.
ஒரு மாத லாபம்: 16% க்கும் மேல்.
ஒரு வருட லாபம்: 3.75%.
52 வார உச்சம்: ₹798 (செப்டம்பர் 23, 2025).
நீண்ட கால அடிப்படையில் (3 மற்றும் 5 ஆண்டுகள்) இப்பங்கு சரிவைச் சந்தித்திருந்தாலும், தற்போதைய எரிசக்தி நெருக்கடிச் சூழலில் இப்பங்கு மீண்டும் ஒரு 'கம்பேக்' கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
பங்குச்சந்தை முதலீடுகள் அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை ஆலோசிப்பது அவசியம்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து?












Click it and Unblock the Notifications