பனையூர் பஞ்சாயத்து.. தவெகவினர் நேரில் வரவேண்டாம்.. ஆன்லைனில் விருப்ப மனு டவுன்லோடு செய்ய உத்தரவு!
சென்னை: தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி தவெக கட்சியினருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கட்சியினர் யாரும் பனையூர் வர வேண்டாம் என்று தவெக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விருப்ப மனுக்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு விநியோகம் இன்று முதல் 9 நாட்கள் பனையூர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான தவெகவினர் பனையூர் அலுவலகத்தில் குவிந்தனர். இன்று பனையூர் அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் வந்ததால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதனால், தவெக சார்பில் வந்திருந்த பவுன்சர்கள், பல்வேறு இடங்களில் பேரிகாடுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாகனங்களை கூட தவெக நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக தொண்டர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தவெக தலைமை அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், "விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் விருப்ப மனுவை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு கொரியர், தபால் அல்லது நேரில் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றித் தலைவர் அவர்களின் ஆசியோடும் ஆதரவோடும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications