இது டிரைலர்தான்.. தமிழகத்தில் வரலாம் முழு ஊரடங்கு.. போன வருடம் மாதிரி வாகன போக்குவரத்துக்கு இ-பாஸ்?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் கடந்த ஆண்டை போல வாகன போக்குவரத்துக்கு இ பாஸ் முறை நடைமுறைக்கு வந்தாலும் வரலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதாவது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ நெருங்கியது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

எத்தனை பேர் மீட்பு
கொரோனாவில் இருந்து 688 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மீண்டு செல்வோரின் எண்ணிக்கை 100 சதவீதமோ அல்லது அதற்கு மேலோ இருந்தது. குறைந்தது 90 சதவீதத்திற்கு மேலோ இருந்து வந்தது.

தமிழகத்தில் 3ஆவது அலை
ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதில் ஓமிக்ரான் வேறு அச்சுறுத்தி வருகிறது. அடுத்த இரு வாரங்களில் தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 3ஆவது அலை தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு
இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள், துணி கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை
பேருந்து போக்குவரத்தை பொருத்தவரை முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அலையின் போதும் கோவை அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொங்கல் பண்டிகை நாட்களில் கடை வீதிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு
பொங்கல் நேரத்தில் கடை வீதிகளில் மக்கள் கூடுவர், அது போல் மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் கூடுவர். காணும் பொங்கல் அன்று கடற்கரை, ஆற்றங்கரை பகுதிகளில் மக்கள் கூடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் முழு ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.

உள்ளாட்சி தேர்தலில் அதிருப்தி
ஆனால் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாதபடி முழு ஊரடங்கு போட்டுவிட்டால் அது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பாதிக்கும் என்றும் பொதுமக்கள் நன்மை கருதியே ஊரடங்கு என்பதை அறியாமல் அரசு மீது தேவையற்ற அதிருப்தி ஏற்படும் என்பதால் பொங்கல் பண்டிகை கழித்து முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளதாம்.
Recommended Video

இ பாஸ் நடைமுறை
எனவே நேற்று அரசு அறிவித்த ஊடரங்கு, கட்டுப்பாடுகள் எல்லாம் டிரைலர்தானாம். பொங்கல் முடிந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பழையபடி இ பாஸ் முறை அமலாகும் என சொல்லப்படுகிறது. தற்போது கடிவாளம் ஏதும் இல்லாததால் மக்கள் கொரோனா பரவலை மறந்து செயல்படுகிறார்கள். எனவே இ பாஸ் நடைமுறையை குறுகிய காலத்திற்காவது தமிழக அரசு கொண்டு வரும் என தெரிகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications