விரைவில் பெண்களுக்கு அடிக்கப்போகும் செம ‘ஜாக்பாட்’.. மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. அமைச்சர் சொன்ன சேதி
சென்னை: சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை 1000 ரூபாயில் 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக அதிகரிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் அண்மையில் உரிமைத்தொகை ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இப்போது 1.30 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மகளிருக்கு மாதம் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல் அங்கு உரிமைத் தொகை ரூபாய் 2,500-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் ஏற்கனவே அறிவித்தபடி, குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உரிமைத்தொகை உயர்வு
மகளிர் உரிமைத் தொகை உயர்வால், அம்மாநில அரசுக்கு கூடுதலாக ரூபாய் 17.50 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சட்டசபை தேர்தலையொட்டி மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
திமுக திட்டம்
சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கையில் வைத்துள்ள முக்கியமான ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதை வைத்தே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகையை 1000 ரூபாயில் 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக அதிகரிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அண்மையில் வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அமைச்சர் சொன்ன மேட்டர்
இந்நிலையில், திமுகவும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications