காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை - தொண்டர்கள் போராட்டம்
அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மிரட்டல் காரணமாகவே ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்து விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அத்துடன் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி வேட்பாளர்கள் 70 பேரை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மிரட்டல் காரணமாக தான் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும்,அவரது தொலைபேசி என்னை ஆராய்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அதிமுகவினர் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
சாலை மறியலால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. காவல்துறையினரின் சுமூக பேச்சைவார்த்தையை தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலை கை விடுத்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications