எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்! இந்தியில் திமுக தலைவருக்கு விளம்பரம்? வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்
சென்னை : ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டைவேடம் போடுகிறது திமுக என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துக்களை மொழிபெயர்த்து இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது..
இந்த அறிக்கையை வைத்து சிலர் விமர்சனங்களையும், கேள்விகளையும் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்கட்சியினர் வைத்து வருகின்றனர்.

ஓ பன்னீர்செல்வம் கண்டனம்
இந்நிலையில் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்தும் நிலையில் இந்தி எதிர்ப்பில் திமுக இரட்டைவேடம் போடுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என, இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் இன்று நிலவுகிறது. தற்போது மாண்புமிகு முதலமைச்சரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை தி.மு.க. அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன.

போலி இந்தி எதிர்ப்பு
அண்மையில், மாண்புமிகு மத்திய உள் துறை அமைச்சர் அவர்கள், நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழுத் தலைவர் என்ற முறையில் ஆட்சி மொழிக் கூட்டத்தில் பேசியபோது, 'ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி பொழியைப் பயன்படுத்துங்கள்' என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன, பிற மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்" என்று வீராவேசத்துடன் விமர்சித்தார். ஆனால், இன்று தன்னுடைய அறிவிப்புகளை இந்தி மொழியில் வெளியிடுகின்றார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

இந்தியில் விளம்பரம்
தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும், குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ்க் கற்றுக் கொள்ள வழிவகை செய்வது ஆகும். ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வடமாநிலங்களில் அவர் புகழ் பாவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் தி.மு.க.வால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுகவின் இரட்டை வேடம்
இதன் முதல் கட்டமாசு தமிழ்நாடு சட்டமன்றப் போவை குெதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியின் பொழி பொர்க்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு போறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்!

ஏமாற்றத்தில் மக்கள்
தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவிந்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, "பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் 'மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன. தி.மு.க.வின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அர வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications