சசிகலா போடும் அந்த அறக்கட்டளை கணக்கு.. ஆகட்டும் பார்ப்போம் என மார்தட்டும் இபிஎஸ் கோஷ்டி!
சென்னை: அதிமுக விவகாரத்தில் பொதுக்குழு, தலைமை அலுவலகம் தாண்டி சசிகலாவுக்கு இன்னமும் நம்பிக்கையாக இருப்பது அறக்கட்டளைதானாம். ஆனால் அறக்கட்டளை விவகாரத்தில் சசிகலா என்ன முடிவெடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்கிறதாம் இபிஎஸ் கோஷ்டி.
அதிமுகவின் பொதுக்குழு விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் பெஞ்ச் விசாரித்தது. அதிமுக விதிப்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஓபிஎஸ் தரப்பு நிராகரித்தது. இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் கனத்த மவுனம் தொடர்பாக நாம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். அதிமுகவுக்கு கொடி, பெயர் எப்படி முக்கியமோ அப்படித்தான் இருக்கிறது அறக்கட்டளையும்.. அதிமுக அறக்கட்டளை உறுப்பினர்களில் சசிகலாவும் ஒருவர். அவர் நினைத்தால் இதனை வைத்தே ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை அடக்க முடியும். ஆனால் விளையாடிவிட்டுதான் வரட்டும் என வேடிக்கை பார்க்கிறார். காலம் சசிகலாவிடம் வந்து சேரத்தான் போகிறது என்கின்றனர்.
ஆனால் இபிஎஸ் தரப்போ, அறக்கட்டளை என்பது மிக முக்கியமானது. இப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பேராதரவு அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்குதான் இருக்கிறது. அதனால்தான் இப்போது இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கு முடியும் போது அதிமுக இபிஎஸ் வசமாகும். அதிமுகவின் பொதுச்செயலாளராவார் இபிஎஸ். அப்போது அறக்கட்டளை எங்கள் வசமாகும். சசிகலாவ்ன் கனவு தவிடு பொடியாகும் என்கின்றனர்.

இன்னொரு பக்கம், இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் நிலையில் அறக்கட்டளையை முன்வைத்து சசிகலா புதிய குடைச்சலைத் தர வாய்ப்புள்ளது. சசிகலாவும் அறக்கட்டளை உறுப்பினர் என்ற அடிப்படையில் இபிஎஸ்-க்கு எதிராக வாதங்களை முன்வைக்கக் கூடும். அதனால் இபிஎஸ்-ன் எதிர்பார்ப்புதான் பூஜ்ஜியமாகும் என பதிலடி தருகிறது சசிகலா தரப்பு. ஆக, அதிமுக அக்கப்போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது மட்டும் உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்!












Click it and Unblock the Notifications