சென்னை: தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கனிமொழி எம்பி கூறினார். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கனிமொழி எம்பி கூறினார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் இந்த கூட்டு நடவடிக்கை குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குறித்த முக்கிய தகவல்களை உடனுக்கு உடன் இங்கே பார்க்கலாம்..
Mar 22, 2025, 2:34 pm IST
ஜனநாயகம் ஒரு போதும் நீர்த்துப்போவதை அனுமதிக்க மாட்டோம் என்று கே. டி ராமராவ் பேச்சு
Mar 22, 2025, 2:34 pm IST
தொகுதி மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் - கே.டி ராமராவ்
Mar 22, 2025, 2:34 pm IST
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.
Mar 22, 2025, 2:34 pm IST
தென் மாநிலங்களுக்கான அநீதி என்பது புதிது இல்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது - கே.டி ராமராவ்
Mar 22, 2025, 2:34 pm IST
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவிகிதம் தென் மாநிலங்களை சார்ந்தது
Mar 22, 2025, 2:34 pm IST
மக்கள் தொகையை மட்டும் கணக்கில் எடுக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஏன் கணக்கில் எடுப்பதில்லை என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு பின் கே.டி ராமராவ் பேட்டி
Mar 22, 2025, 1:59 pm IST
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றம் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST
மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நோக்கம்
Mar 22, 2025, 1:59 pm IST
தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST
முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST
பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை - கனிமொழி
Mar 22, 2025, 1:37 pm IST
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்றரை மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mar 22, 2025, 1:34 pm IST
தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது
Mar 22, 2025, 1:34 pm IST
அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் - முதல்வர் ஸ்டாலின்
Mar 22, 2025, 1:34 pm IST
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்றரை மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது
Mar 22, 2025, 1:34 pm IST
தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் என்று தகவல்
Mar 22, 2025, 1:23 pm IST
தொகுதி மறுவரையறை மக்களவை தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டும் கிடையாது - டிகே சிவக்குமார்
Mar 22, 2025, 1:23 pm IST
கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது - கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்
Mar 22, 2025, 1:23 pm IST
தெற்கு வடக்கு இடையேயான போர் கிடையாது - டிகே சிவக்குமார்
Mar 22, 2025, 1:23 pm IST
மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டு எடுப்பதற்கான போராட்டம் - சிவக்குமார்
Mar 22, 2025, 12:44 pm IST
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் அதன் பிரதிநிதித்துவத்தை குறைக்காமல் எல்லை நிர்ணய பயிற்சி நடத்தப்பட வேண்டும். மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு தொகுதி மறுசீரமைப்பு தேவை என்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் சூழலை இழக்கும். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பது இல்லை, நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும். இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.
எனது முதல் கருத்து மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் இந்தியா அரசியல் குரலை இழக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ஜனநாயகத்தை காக்கும் முக்கிய கூட்டம் இது - காணொலி காட்சி மூலமாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நவீன் பட்நாயக் கூறினார்.
பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. நினைத்ததை முடிவாக எடுக்கிறார்கள் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். டெல்லியில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் - பினராயி விஜயன்
மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்த வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்டது என்று பினராயி விஜயன் பேச்சு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்படுகிறது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொகுதி மறுவரையரைக்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். கடைசியாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுவார் என்று தெரிகிறது. பிற்பகல் 2 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.
6:47 AM, 22 Mar
தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்குமாறு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களுக்கும், ஓடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் இந்த 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
6:54 AM, 22 Mar
தொகுதி மறுவரையை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க மூன்று மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
7:03 AM, 22 Mar
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்கிறது. கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி முன்னாள் எம்பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பது அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
7:35 AM, 22 Mar
சென்னையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் நடைபெறும் கிண்டி ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#WATCH | Chennai | Visuals from outside of the venue where the meeting on delimitation called by Tamil Nadu CM MK Stalin will be held today. pic.twitter.com/X8Xjesmj0Y
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று சென்னையில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டிடம் நேற்று நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வண்ண விளக்குகளால் மிளிரவிடப்பட்டன.
#WATCH | The meeting on delimitation, called by CM MK Stalin, to be held tomorrow, March 22.
Visuals from the Ripon Building - headquarters of the Greater Chennai Corporation in Chennai in Tamil Nadu. pic.twitter.com/7ZpPwKAGzS
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டு குழு நடவடிக்கை கூட்டம் நடக்கும் நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
#WATCH | Tamil Nadu: Sand art made by DMK supporters at Marina Beach in Chennai ahead of the meeting on delimitation called by CM MK Stalin today. pic.twitter.com/QVH17IIGeJ
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் கூட்டு குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பெட்டியில் வைக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளது.
8:34 AM, 22 Mar
தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டுக்குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர்.
மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத் தர மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார். மேலும், தொகுதி மறுநீரமைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் கூட்டம் தான் இந்த சென்னை கூட்டம் என்றும் அவர் கூறினார்.
8:42 AM, 22 Mar
சென்னையில் நடைபெறும் கூட்டு குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்கும் வெளி மாநில தலைவர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அந்தந்த மாநில தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவ்வாறு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
9:12 AM, 22 Mar
தொகுதிகளை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம். இது தொடக்கம் தான். வெற்றியை நோக்கி எங்கள் நடவடிக்கை இருக்கும். கல்வி உள்ளிட்ட துறைகளில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என்று டிகே சிவக்குமார் கூறினார்.
9:38 AM, 22 Mar
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் உள்பட 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்துக்கு திரிணாமூல் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தும் அக்கட்சி பங்கேற்கவில்லை. போலி வாக்காளர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சென்னை கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
9:45 AM, 22 Mar
ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவே இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் என்றும் இந்த கூட்டம் வெற்றி பெறும் என்றும் இந்திய கன்ம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
9:53 AM, 22 Mar
சென்னை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடக்கும் இடத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை
10:03 AM, 22 Mar
சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடக்கும் இடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ள மாநிலங்கள் ஒருங்கிணையும் இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் என்று ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
10:10 AM, 22 Mar
சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க 29 முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 24 கட்சிகள் பங்கேற்றுள்ளது.
10:11 AM, 22 Mar
கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோரும் டிகே சிவக்குமாரை வரவேற்றனர்.
10:32 AM, 22 Mar
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்கு வருகை தந்துள்ள முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் அவர்களது இருக்கைக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு பரிசு பெட்டிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
10:40 AM, 22 Mar
இந்திய ஜனநாயகத்தை காக்க ஒன்று கூடியுள்ளோம் - முதல்வர் ஸ்டாலின்
10:43 AM, 22 Mar
பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். இந்திய ஜனநாயகத்தை காக்க ஒன்று கூடியுள்ளோம் என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
10:49 AM, 22 Mar
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இழக்க நேரிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது - முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடியுள்ளோம். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்படுகிறது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் - பினராயி விஜயன்
மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்த வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்டது என்று பினராயி விஜயன் பேச்சு
பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. நினைத்ததை முடிவாக எடுக்கிறார்கள் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். டெல்லியில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை
ஜனநாயகத்தை காக்கும் முக்கிய கூட்டம் இது - காணொலி காட்சி மூலமாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நவீன் பட்நாயக் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் சூழலை இழக்கும். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பது இல்லை, நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும். இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.
எனது முதல் கருத்து மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் இந்தியா அரசியல் குரலை இழக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Stalin's Delimitation Meet Today in Chennai LIVE Updates in Tamil [நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சிகள் கூட்டம்]: Follow LIVE updates of the All-Party Delimitation Meeting in Chennai, led by Tamil Nadu CM MK Stalin in Tamil. Stay informed on today’s discussions, the joint action against Delimitation, and political reactions from Tamil Nadu and other state leaders.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.