அண்ணாமலை போடும் "ரிவர்ஸ் கியர்".. அலறும் தமிழக பாஜக தலைமை! அதிமுகவில் வெடிக்க போகும் அடுத்த குண்டு?
சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத புள்ளியாக மாறியிருக்கிறது.. உண்மையிலேயே அண்ணாமலை என்ன செய்ய போகிறார்? அண்ணாமலையின் விலகலால் கூட்டணிக்குள் ஏற்பட போகும் தாக்கங்கள் என்னென்ன? பாஜக என்ன செய்ய போகிறது? சற்று சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!
அண்ணாமலை பாஜக தலைமையில் இருந்தபோதும் சரி, கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலும் சரி, ஆல்டைம் லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார் அண்ணாமலை..

அதிலும் நயினாரிடம் தலைமை பதவி சென்றதில் இருந்தே பாஜகவிற்குள் நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த உட்கட்சி பூசல் , மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுத்து, தற்போது பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழக பாஜக - நயினார் நாகேந்திரன்
தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட அண்ணாமலையை, இப்போது வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்தது, அவரை திட்டமிட்டு ஓரம் கட்டும் செயலாகவே அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது... இதுவே அவர் தேர்தல் பணிகளில் இருந்து விலக முடிவு செய்ததற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்..
அண்ணாமலையின் இந்த முடிவைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளர்கள் தென் மாவட்டங்களில், குறிப்பாக நெல்லையில் ஒன்றிணைய தொடங்கியுள்ளனர்.
அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் ஏற்கனவே தொடங்கப்பட்டு, பிறகு அவரது உத்தரவின் பேரில் கலைக்கப்பட்ட அமைப்புகள், தற்போது மீண்டும் உயிர்பெற தொடங்கியுள்ளன..
அண்ணாமலையின் புதிய முடிவு?
வரும் பிப்ரவரி 8ம் தேதி நெல்லையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலையின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. இது மாநில தலைமைக்கு ஒருவித மறைமுக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது..
தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி அண்ணாமலை ஒதுங்கினாலும், கள யதார்த்தம் என்பது தலைமை மீதான அதிருப்தியையே சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதிமுக, பாஜகவில் தாக்கம்?
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் போனாலோ அல்லது பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடாவிட்டாலோ, அது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது.
காரணம், அண்ணாமலைக்கென்று தனிப்பட்ட முறையில் இளைஞர் பட்டாளமும், தீவிரமான சோஷியல் மீடியா ஆதரவும் இருப்பதால், அவர் களத்தில் இல்லாதது தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார வேகத்தை நிச்சயம் குறைக்க வாய்ப்புள்ளது...
குறிப்பாக, திமுகவிற்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் அண்ணாமலை காட்டிய வேகம், இப்போது தலைமையிடம் இருக்குமா என்ற சந்தேகம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது... இருந்தாலும் இது போன்ற மாற்றங்கள் கட்சியின் தேசிய தலைமையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம் என்றும், விரைவில் அவருக்கு தேசிய அளவில் பெரிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தரப்பு நம்புகிறது.
அண்ணாமலைக்கு பிளஸ் பாயிண்ட்ஸ்
அதிமுகவை பொறுத்தவரை, அண்ணாமலையின் விலகல் குறித்து வெளிப்படையான கருத்துக்களை சொல்ல தவிர்க்கிறது...திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டணியை ஆதரிப்பார்கள் என்றும், அண்ணாமலை நிச்சயம் பிரசாரத்திற்கு வருவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால், அண்ணாமலையை ஒரு பிம்பமாக முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்க நினைத்த சில வேட்பாளர்களுக்கு இது பின்னடைவாகவே அமையும் என்பதையும் இங்கு நாம் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..
"ரீ-பொசிஷனிங்" முயற்சி
அதேசமயம் அண்ணாமலையின் விலகலை, ஒரே நேர்கோட்டில் பார்க்காமல், மற்றொரு கோணத்திலும் நாம் சற்று ஆராய வேண்டி உள்ளது.. அவரது விலகல், முழுமையான அரசியல் ஓய்வாக இல்லாமல், தனது ஆதரவாளர்களின் பலத்தை மீண்டும் ஒருமுகப்படுத்தும் ஒரு "ரீ-பொசிஷனிங்" முயற்சியாகவும் இருக்கலாம்.. தன்னுடைய அரசியல் முகத்தை புதிதாக அமைத்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் இதை அண்ணாமலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதாவது, நேரடி பதவிகளுக்காக ஓடாமல், மக்களுடன் நேரடியாக இணையும் அரசியல் பணிகளிலும், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும் அவர் கவனம் செலுத்தலாம்... அதனால், உடனடியாக அவர் தேர்தல் மேடைகளில் தெரியாமல் இருந்தாலும், பின்னணியில் இருந்து மெதுவாக தனது செல்வாக்கை மீண்டும் உருவாக்க முயற்சிப்பார் என்ற கோணத்திலும் இதை பார்க்க வேண்டியுள்ளது..
விரைவில் முடிவு?
எனினும், அண்ணாமலையின் இந்த மௌனமும் விலகலும் பாஜகவிற்குள் ஒரு புதிய அதிகார போட்டியை உறுதிப்படுத்தியுள்ளது... அண்ணாமலை மீண்டும் தேர்தல் களத்திற்கு வருவாரா அல்லது ஒரு புதிய அரசியல் பாதையை நோக்கி தனது ஆதரவாளர்களை வழிநடத்துவாரா என்பது வரும் நாட்களில் அண்ணாமலை எடுக்கப்போகும் முடிவிலேயே அடங்கியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
நெல்லையில் போட்டியிடாதது ஏன்? "அதிமுக கேட்டாங்க! விட்டுக் கொடுத்துட்டோம்!" நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications