போனிலேயே வைப்ரேஷன் கொடுப்பேன்.. அன்னபூரணி அம்மாவின் அடேங்கப்பா "மகிமைகள்"
சென்னை: என்னிடம் போனில் பேசும்போது அந்த லைனிலேயே எதிர் முனையில் பேசுவோருக்கு நான் வைப்ரேஷன் கொடுப்பேன் என அன்னபூரணி அம்மா தெரிவித்துள்ளார்.
Recommended Video
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அன்னபூரணி அரசு அம்மா என்பவர் வைரலாகி வருகிறார். இவர் திவ்ய தரிசனம் என்ற பெயரில் ஜனவரி 1ஆம் தேதி நிகழ்ச்சி நடத்துவதாக போஸ்டர் ஒட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சி அனுமதி இன்றி நடத்தப்படுவதாக போலீசார் தடை விதித்தனர் அன்னபூரணி அம்மா மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

எங்கே பிறந்தேன்
இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு அன்னபூரணி அம்மா பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் நான் எங்கே பிறந்தேன் வளர்ந்தேன் என்பது எல்லாம் சொல்வதற்காக இந்த பூமிக்கு வரவில்லை. நான் சாதாரணமாக பிறக்கவில்லை எனக்கும் அரசுக்கும் பிறப்பு கொடுத்ததே ஆன்மீக பயணத்திற்காக தான்.

ஆதிபராசக்தி
நீங்க பார்த்தது வேண்டுமானால் இரண்டு உடல்கள் ஆக இருக்கலாம். ஆனால் எங்களுக்குள் ஒரே சக்தி தான் இருக்கிறது. நான் இதுவரை என்னை ஆதிபராசக்தி என்று சொன்னதே இல்லை அருள்வாக்கு கொடுப்பதாகவும் சொன்னதில்லை. என்னிடம் நிறைய பேர் இயற்கை ஒளி பயிற்சி பெற்று விட்டு தீட்சை பெற்று உள்ளார்கள்.

பக்தர்கள்
அந்த நூற்றுக்கணக்கான பேரும் என்னுள் ஒரு சக்தி இருப்பதை அவர்களாகவே உணர்ந்தார்கள். எனக்கு ஏன் பூ போடுறாங்கன்னு கேக்குறீங்க. என்னை நீங்க எல்லாருமே படைத்த உடலால் தான் பார்க்கிறீங்க. ஆனா என்னோட குழந்தைகள் (பக்தர்கள்) மட்டும்தான் என்னை தாயாக பார்க்கிறார்கள். அவங்க ஆசைப்பட்டு செய்யறது நான் எப்படி தடுக்க முடியும்?

வைப்ரேஷன்
நான் இருக்கையில் அமர்ந்து இருக்கும் போது ஏன் குதிக்கிறீர்கள் எனக் கேட்கிறீர்கள். எனக்கு சக்தி அதிகமாக வெளிப்படும். அப்போது எனது உருவமே 2 ஆகிவிடும் . முகம் பெரிதாகிவிடும் . அப்போது என் உடம்பு குதிக்கும். என் குழந்தைகள் எல்லாம் அழுவார்கள். அதை உணர்ந்து நானும் அழுவேன். இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இதை நீங்கள் உணராமல் நடிப்பு என்றால் நான் என்ன செய்யட்டும்.

இகழ்ச்சி
என்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி அவமானப்படுத்தினால் உம் சரி எனக்கு எதுவுமே இல்லை சக்தி என சொல்லிக்கொண்டு என் பக்தர்கள் அவமரியாதையாக இருக்கிறார்கள் அதை உடல் நினைச்சு நீங்க அசிங்கப்படுத்திகிட்டு இருக்கீங்க. இங்கே சாமி, கடவுள், மதம் எதுவுமே கிடையாது. இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. நான் பேச மாட்டேன். ஆனால் போனில் இருக்கும் போதே ஒரு வைப்ரேஷன் இருக்கும். எதிரில் பேசுபவர்கள் அந்த வைப்ரேஷன் ஐ உணர்ந்து விடுவார்கள். என்னை பற்றி புரிந்து கொள்கிறார்கள் என்றார் அன்னபூரணி அம்மா.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications