இருதய பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 மாத ஆண் குழந்தை! உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 5 மாத சிறுவன் சித்தார்த் இருதய குறைபாடுகளால் உயிருக்கு போராடி வருகிறான். சித்தார்த் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் ரூ.3.75 லட்சம் செலவு ஆகும் என கூறிவிட்டனர். கடை ஒன்றில் உதவியாளராக இருக்கும் அவரது தந்தையால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியவில்லை.
இதனால் சிறுவனின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.. உங்களது சிறு உதவி கூட சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவும். உதவுங்கள் ப்ளீஸ்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சித்தார்த் என பெயர் சூட்டி அழகு பார்த்த நாகராஜ் தம்பதிக்கு, தங்கள் செல்ல மகன் உடல் நிலை பற்றி அறிந்ததும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
குறை மாதத்தில் பிறந்த சித்தார்த் உடல் எடை மிகவும் குறைவாக இருந்தது. மூச்சு விடுவதிலும் கடும் சிரமம் இருந்தது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சித்தார்த்தை கொண்டு சென்றனர். செயற்கை சுவாசம் மூலம் சித்தார்த்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனது மகன் உடல் நிலை தேறும் என்ற எதிர்பார்ப்புடன் மருத்துவமனை வார்டின் வெளியே நிர்கதியாக காத்திருக்கிறார்.

தனது குழந்தை ஒவ்வொரு மூச்சுக்கும் போராடுவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு நாள் காலையிலும் தனது மகன் சித்தார்த் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்குமா? டாக்டர்கள் என்ன சொல்ல போகிறார்கள்? என்ற பதைபதைப்புடன் காத்திருக்கிறார் தாய்.
நற்செய்தியை எதிர்பார்த்த அவருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் சித்தார்த்திற்கு சிக்கலான இருதய பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். தனது குழந்தைக்கு பாலூட்டி, அவனது சிரிப்பை கண்டு மகிழ வேண்டிய தாய், மருத்துவமனையில் மானிட்டர்களையும் டியூப்களையும் பார்த்து ஒவ்வொரு நொடியும் வேதனையை அனுபவித்து வருகிறார்.
சித்தார்த்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். சித்தார்த் உடல் நிலையை பார்த்த மருத்துவர்கள் மியாட் மருத்துவமனைக்கு ரெஃபர் செய்தனர். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தை சித்தார்த்திற்கு மிகவும் தீவிரமான இருதய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

Heterotaxy with levocardia, Atrial Septal Defect (ASD), Double Outlet Right Ventricle (DORV), Pulmonary Stenosis (PS), Unobstructed Supracardiac TAPVC போன்ற இருதய வால்வு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது. இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சித்தார்த்தின் தந்தை நாகராஜ், கடை ஒன்றில் உதவியாளராக உள்ளார். மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் நாகராஜால் தனது மகன் சித்தார்த் சிகிச்சை செலவுக்கு தேவையான ரூ.3,75,000 செலவு செய்வது இயலாத காரியம். ஏற்கனவே கடன் வாங்கி ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இன்னும் ரூ.3,75,000 செலவு செய்வதற்கு அவர்களிடம் சேமிப்பு என எதுவுமே இல்லை.
எனவே, சித்தார்த்தின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் சித்தார்த்தின் உயிரை காப்பாற்றும். சிறியது பெரியது என்றெல்லாம் இல்லை. உங்களால் முடிந்த அளவு உதவி செய்தால் போதும். 5 மாத குழந்தை சித்தார்த்தை காப்பாற்றுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்யுங்கள் ப்ளீஸ்..
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications