சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தூக்குங்க" அவரை.. பாஜக பக்கம் தூண்டிலை வீசிய திமுக.. யார் அந்த சேலம் புள்ளி.. வரிந்து கட்டிய கட்சி

எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ் தரப்பினர் ஆட்களை இழுத்து வருகிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பல்வேறு அதிரடிகள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. அதற்கேற்றவாறு வியூகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், திமுக, பாஜக, அதிமுக என 3 கட்சிகளுமே தங்களை பலப்படுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளன.

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக கையில் எடுத்துவிட்டது.. ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்து கொண்டே மறுபக்கம், திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை மும்முரப்படுத்தி உள்ளது பாஜக.

ஆனால், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன், மற்றும் திருச்சி சிவா மகன் போன்ற ஒருசிலர் மட்டுமே பாஜக பக்கம் தாவிய நிலையில், பெரிய அளவிலான புள்ளிகள் யாரும் செல்லவில்லை என்றே தெரிகிறது..

ரிஸ்க் எடுக்கிறாரா எடப்பாடி.. முடிஞ்சு போச்சு போல.. மண்டை காயும் மேலிடம்.. ஆட்டம் ஆரம்பமாகிறதாமேரிஸ்க் எடுக்கிறாரா எடப்பாடி.. முடிஞ்சு போச்சு போல.. மண்டை காயும் மேலிடம்.. ஆட்டம் ஆரம்பமாகிறதாமே

சீனியர்கள்

சீனியர்கள்

இந்த சூழலில்தான், ஒற்றை தலைமை விவகாரத்தில் சிக்கி கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் திமுகவில் உள்ள சில சீனியர்கள் மீது பாஜக குறி வைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.. அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.. திமுக எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளாராம்.. அவர் கரூரை சேர்ந்தவர் என்றார்கள்.. இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் என்ன ஆனது என்று அதற்கு பிறகு எதுவும் தெரியவேயில்லை.

 தம்பி 4 பேர்

தம்பி 4 பேர்

இந்த சமயத்தில்தான், சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்தும் அரசியலிருந்தும் விலகினார்... எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று சுப்புலட்சுமி அந்தசமயம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டாலும், இவரை பாஜகவுக்குள் கொண்டு வர, ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாம்.. அதற்காக, திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த சீனியர் ஒருவரிடம், சுப்புலட்சுமியை கட்சிக்குள் சேர்த்து கொள்வது பற்றி கருத்து கேட்கப்பட்டதாம்.. அதற்கு அந்த சீனியர், "சுப்புலட்சுமி தொகுதியில் ஏற்கெனவே பாஜக வலுவாகவே உள்ளது.. அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர்தான் வெற்றி பெற்றுள்ளார்.. அந்தம்மாவை இங்கே அழைத்து வந்தால், "என்னப்பா தம்பி" என்று பெயரை சொல்லிதான் நாலு பேர் முன்பு கூப்பிடுவார்.. அது நமக்குதான் சங்கடமா போயிடும்" என்றாராம்.

தூண்டில்

தூண்டில்

இதையடுத்து, சுப்புலட்சுமியை அழைக்கும் ஐடியாவையே மேலிடம் நிறுத்திவிட்டதாம்.. அதற்கு பதிலாக, திமுக தரப்பிலிருந்து பெரிய தலையை தூக்க தூண்டில் வீசப்பட்டுள்ளது.. அதாவது, பாஜக மகளிரணி நிர்வாகிகளை செந்தில் பாலாஜி எப்படி ஸ்கெட்ச் போட்டு, திமுகவுக்கு இழுத்தாரோ அதுபோலவே, பதிலடி ஒன்றை தர போவதாக தகவல்கள் பரபரத்தன.. அதை பாஜக கச்சிதமாக செய்து முடித்துவிட்டது.. கடலுார், கன்னியாகுமரி மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் ஒருசிலர் பாஜகவுக்கு தாவவும் செய்தார்கள்..

 வலை போட்டாச்சு

வலை போட்டாச்சு

இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவுக்கு பதிலடியை தர திமுக முடிவு செய்துள்ளது.. அதற்காக பாஜகவில் இருந்து திமுகவுக்கு சிலரை இழுத்து வரப்போகிறார்களாம்... அதிமுக ஏற்கனவே 4 அணிகளாக பிரிந்து உள்ளதால், அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க, மாவட்ட வாரியாக திமுக களம் இறங்கி உள்ளது.. மற்றொருபக்கம் பாஜகவின் பெரிய புள்ளிகளுக்கும் திமுக வலையை விரித்துள்ளது.. இதற்கான பொறுப்பை சேலம் மாவட்ட முன்னாள் அமைச்சரிடம் தந்திருக்கிறதாம் திமுக மேலிடம்.

 வெள்ளை கொடிகள்

வெள்ளை கொடிகள்

இன்னொரு விஷயம் கசிந்துள்ளது.. பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்கள் சிலர் திமுக பக்கம் தாவ உள்ளார்களாம்.. இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது... திமுகவில் இருந்து பாஜகவுக்கு போனவர்கள், அங்கிருந்து மறுபடியும் திமுகவுக்கே வரப்போகிறார்களாம்.. இதற்கான தூது படலங்களும் துவங்கி உள்ளன.. இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடத்தின் ஆதரவு இல்லை என்பதை சுட்டிக்காட்டி, அவரது அணியில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தங்கள் பக்கம் அதிருப்தியாளர்களை இழுத்து வருகிறார்களாம்.. இப்போதே தங்கள் அணிக்கு வந்துவிட்டால் மெகா பதவிகள் கிடைக்கும் என்று சொல்லி ஆசை வார்த்தைகளை வீசி வருகிறதாம்.. ஆக, திமுக டூ பாஜக, பாஜக டூ திமுக, எடப்பாடி டூ ஓபிஎஸ், ஓபிஎஸ் டூ எடப்பாடி என தூண்டில்கள் திசைக்கொன்றாய் வீசப்பட்டு வருகிறது.

English summary
Are 2 BJP executives going to join DMK and what are the Edappadi palanisamys strategies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X