சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய - அற்புதம்அம்மாள் வேதனை பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியும் மகனின் விடுதலை கிடைத்தபாடில்லை என்ற வேதனையில் ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் அற்புதம் அம்மாள். பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்? என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரட்டை ஆயுள் தண்டனையும் தாண்டி உள்ளதால் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Arputham ammal tweets about perarivalan release

இந்த வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. வழக்கில் 7 நாள்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

Arputham ammal tweets about perarivalan release

இந்த வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் நிராகரித்து விட்டார். இதற்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து; அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் கவர்னர் என்று பதிவிட்டுள்ளார் அற்புதம்மாள். என்ன செய்வதம்மா என பலரும் கொதிப்போடு் கேட்டபடி உள்ளனர். ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்? " என்று பதிவிட்டுள்ளார். தாயின் வேதனையை யார்தான் தீர்ப்பது. கண்ணீரை யார் துடைப்பது.

English summary
Perarivalan release case, Arputham Ammal post on her Twitter page what I still have to do as a mother in agony of not getting her son released. Should the state government say the answer? Want to act? she also said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X