Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோபாலபுரத்தில் பிறந்துவிட்டால் ஸ்டாலின் பிரதமராகிவிட முடியுமா?.. பாஜக அண்ணாமலை சரமாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபாலபுரத்தில் பிறந்துவிட்டால் பிரதமராகி விட முடியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கோடை விழாவின் 10 ஆவது விழாவில் ஹைந்தவ சேவாசங்கம் சார்பில் நடந்த 85 ஆவது இந்து சமய மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அண்ணாமலை பேசுகையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பாஜகவினர் அதிகமாக வென்றுள்ளார்கள்.

3ஆவது கட்சி பாஜக

3ஆவது கட்சி பாஜக

தமிழக அளவில் பாஜக 3ஆவது கட்சியாக வளர்ந்துள்ளது. திமுக கூட்டணியில் 13 கட்சிகள் உள்ளன. பாஜக தனியாக வளர்ந்துள்ளது. உக்ரைன் போரின் போது பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் ஒரே நேரத்தில் பேசக் கூடிய வல்லமை படைத்தவர். உக்ரைனிலிருந்து இதுவரை 12 ஆயிரம் மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ளது.

பாகிஸ்தான் மாணவர்கள்

பாகிஸ்தான் மாணவர்கள்

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இந்திய நாட்டின் கொடியை காட்டி ஊருக்கு போயுள்ளனர். இது உலக அரங்கில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இருக்கும் மதிப்பே காரணமாகும். உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்கும் என திமுக அரசு தெரிவித்தது.

டெல்லி வரை மட்டுமே

டெல்லி வரை மட்டுமே

ஆனால் அவர்கள் இதுவரை டெல்லி வரை மட்டுமே சென்றுள்ளார்கள். தமிழக மாணவர்களை மீட்க ரூ 3.5 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. அது அவர்கள் பஜ்ஜி சாப்பிடும் செலவுக்கு பயன்படுத்தப்பட்டதாகும். இந்திய விமான படை மூலமே மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள்.

கோபாலபுரம்

கோபாலபுரம்

பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கிளம்பியுள்ளார்கள். அந்த வரிசையில் இப்போது ஸ்டாலின் கிளம்பியுள்ளார். கோபாலபுரத்தில் பிறந்த காரணத்திற்காக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் ஆகிவிடமுடியுமா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+