"கோபாலபுரம் செந்தில்பாலாஜி.. பிடிஆர், துரைமுருகன்".. திமுக மீது பாய்ந்த அண்ணாமலை
செந்தில்பாலாஜி, துரைமுருகன், பிடிஆர் குறித்து அண்ணாமலை விமர்சித்துள்ளார்
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவை சரமாரியாக விளாசி தள்ளினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது
தமிழ்நாடு அரசு 2022-2023 க்கான ஆண்டு பட்ஜெட்டை கடந்த வாரம் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்..
இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தன.. மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் எதுவுமே இதில் இல்லை என்று அதிமுக கருத்து கூறியிருந்தது..

வெற்று அறிக்கை
தமிழக அரசின் வெற்று அறிக்கை என்று அமமுக தெரிவித்தது.. ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்து ஒரு வாரம் ஆகியும் பாஜக மட்டும் இன்னமும் விமர்சித்து கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில், தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டமும் அறிவித்து, அந்த ஆர்ப்பாட்டத்தை நேற்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தியது..

வி.பி.துரைசாமி
இதில் கலந்து கொண்டவர்கள் மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவை அட்டாக் செய்து மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: "மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, அதுக்கு புதுசா ஒரு பெயரை வைத்து திமுக அரசு அறிவித்து கொண்டிருக்கிறது..

செந்தில்பாலாஜி
இந்த பட்ஜெட்டை, தமிழக பட்ஜெட் என்று சொல்வதை விட, கோபாலபுரத்தை சார்ந்த துரைமுருகன், வேலு, செந்தில்பாலாஜி, தியாகராஜன் ஆகியோரை சமாளிப்பதற்காகவும், மேம்படுத்தவும் போடப்பட்டுள்ள பட்ஜெட் என்றுதான் சொல்லணும்.. மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் நிதி ஒதுக்கீட்டை குறைத்து, தன்னுடைய துறைக்கு மட்டும் 600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளார் நிதியமைச்சர்..

மின்சாரத்துறை
ஊழலில் முதலிடத்தில் மின்சார துறையும், அடுத்து நெடுஞ்சாலைத் துறையும் இருக்கின்றன.. கிராமங்களில், பிரதமரின் திட்டத்தில் சாலைகள் போடப்படுகின்றன... நெடுஞ்சாலைகளை தேசிய ஆணையம் போடுகிறது... பிறகு ஏன் நெடுஞ்சாலை துறைக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்? இந்த நிதியை ஒப்பந்தாரர்களுக்கு பிரித்து கொடுத்து, அவர்கள் கட்சி நிதி கொடுப்பதற்காக ஒதுக்கப்படுகிறது.. இதுதான் திராவிட மாடல் அரசு.

பட்ஜெட்
கடந்த 2020 - 21 நிதிஆண்டில், நம் நாட்டில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுதான்.. ஆனால், இதை பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை.. ஏன் தெரிவிக்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் துபாய் போகும்போது, நிறைய நிதியை எடுத்து சென்றிருக்கிறார்.. இதனால், தமிழகத்திற்கு வரும் நிதிக்காக சென்றிருக்கிறாரா? கோபாலபுரத்தின் நிதிக்காக சென்றிருக்கிறாரா? அவர்களின் சொந்த நிதிக்காக சென்றிருக்கிறாரா? என்று தெரியவில்லை.

குடும்ப விழா
ஆனால், துபாயில், அரசு விழா என்ற போர்வையில் குடும்ப விழா நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. துபாயில் ஓராண்டாக நடக்கும் 'வேர்ல்டு எக்ஸ்போ' நிகழ்ச்சி, வரும் 30ம் தேதி முடிவடைகிறது... 5 நாட்களில் முடியும் உலக கண்காட்சியில் தமிழக அரங்கை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இன்னும் எத்தனை பொய் தான் சொல்லுவீங்க? மக்களும் எத்தனை முறைதான் நம்புவாங்க?

நிதியமைச்சர்
ஒரு பூனை என்ன தான் கனவு கண்டாலும் கூட, புலிக்கு நிகராக வர முடியாது.. இதை முதல்வர், நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்... இனியாவது மத்திய அரசுடன் இணைந்து, மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினால் போதும்... அப்படி செயல்படுத்தினால், தமிழக அரசு பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இருக்காது" என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சை கேட்டு, திமுக கூடாரமே கொந்தளித்து போய் உள்ளது..!

திராவிட மாடல்
அதுமட்டுமல்ல, அண்ணாமலையும், எச்.ராஜாவும் சமீபகாலமாக, எங்கு பேசினாலும், திமுகவின் திராவிட மாடலை விமர்சிப்பதை முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த முறை திமுக ஆட்சிக்கு பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே இந்த திராவிட மாடல் அரசியலைதான் முன்வைத்து வருகிறது.. திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை என்னுடைய பணியாக மேற்கொள்ளவிருக்கிறேன் என்று சுயசரிதை வெளியீட்டு விழாவில் பேசி முதல்வர் பேசியிருந்தார்.

மாநில உரிமை
இதை வலியுறுத்திதான் மாநில உரிமைகள் மீட்பு என்ற விஷயத்தையும் கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. இதையடுத்துதான், பாஜகவின் விமர்சனம் மேலும் அதிகமாகி வருவதாகவும், திமுகவை இந்த கோட்பாட்டை டேமேஜ் செய்யும் வகையிலேயே வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.. இதுவும் திமுக தொண்டர்களின் கொதிப்பை அதிகமாக்கி உள்ளது..!
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’











Click it and Unblock the Notifications