சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது: ஜூனியர் விகடன் சர்வே

Google Oneindia Tamil News

சென்னை; தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது ஜுனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகள்.

மோடியை பார்த்து கும்பிடு போட.. நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. பொங்கிய உதயநிதி.. பரபர பேச்சு! மோடியை பார்த்து கும்பிடு போட.. நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. பொங்கிய உதயநிதி.. பரபர பேச்சு!

சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளை ஜூனியர் விகடன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 163 இடங்களிலும் அதிமுக கூட்டணி 52 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மநீமவுக்கு 1

மநீமவுக்கு 1

மேலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்குமாம்; தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் வெல்லும் வாய்ப்பு இல்லை என்கிறது ஜூனியர் விகடன் சர்வே.

20 தொகுதிகளில் பாஜக

20 தொகுதிகளில் பாஜக

அதேபோல் அதிமுகவிடம் 20 தொகுதிகளை அடம்பிடித்து கேட்டு வாங்கி போட்டியிடுகிறது பாஜக. தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன் என அக்கட்சியின் முன்னணியினர் பலரும் தேர்தலில் களம் காண்கின்றனர்.

பாஜகவுக்கு பூஜ்ஜியம்

பாஜகவுக்கு பூஜ்ஜியம்

ஆனால் ஜூனியர் விகடன் கருத்து கணிப்பானது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2001-ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்த போது பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இந்த தேர்தலில் எப்படியாவது சட்டசபைக்கு எம்.எல்.ஏக்களை அனுப்புவதில் பாஜக மும்முரமாக இருக்கிறது.

தீவிர பிரசாரம்

தீவிர பிரசாரம்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பலரும் பிரசாரம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் ஒரு இடத்திலும் கூட பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை என தெரிவித்திருக்கிறது ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு.

English summary
Junior Vikatan Survey Predicts BJP will not get a single seat in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X