சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பணிந்ததா" பாஜக.. திமிறியெழுந்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனே சொல்லிட்டாரே.. இங்கே நடந்த "ஹைஜாக்"

எடப்பாடி பழனிசாமிக்கு மேலிடத்தில் ஆதரவுகள் கூடி வருவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பதுதான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.

ஒருமுறை ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் குறித்து சில கருத்துக்களையும் சொல்லி இருந்தார்.

குறிப்பாக, "ஒரு உட்கட்சி பிரச்சனை என்று வருகிறபோது, அந்த மோதலில் தடித்த வார்த்தைகள், கடுமையான வாதங்கள், வாதி, பிரதிவாதங்கள் கடுமையாக தான் இருக்கும்.. ஆனால், சிலசமயம், இதுபோன்ற பிளவுகள் வரக்கூடாது.. அது, திமுகவுக்கு உறுதியான எதிர்காலத்தை தந்துவிடும் என்பதை உணர்ந்துவிட்டாலே போதும். பிரிந்தவர்கள் ஒன்றுசேர வாய்ப்பு உள்ளது.. தான் என்ற அகந்தையும், தன்னை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் எனற் தன்னல சீக்கும் பிடித்து அலைகிறார் எடப்பாடி பழனிசாமி..

ஏன் இப்படி கேட்டுக்கிட்டே இருக்கீங்க? ஓபிஎஸ் தரப்பிற்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. எடப்பாடி குஷி ஏன் இப்படி கேட்டுக்கிட்டே இருக்கீங்க? ஓபிஎஸ் தரப்பிற்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. எடப்பாடி குஷி

 39 MPs

39 MPs

நாலரை வருடம் முழுமைப்படுத்திவிட்டார் என்பதற்காகவே அவரை நல்ல முதல்வர் என்றோ, நல்ல தலைவர் என்றோ ஒப்புக் கொள்ள முடியாது.. அம்மா தந்துட்டு போன 39 எம்பிக்கள் எங்கே? விட்டுக்கொடுக்க மட்டும்தான் ஓபிஎஸ், பெற்றுக்கொள்ள மட்டும்தான் எடப்பாடி என்பதில் கொஞ்சம் கூட நியாயமே கிடையாது. பாஜகவால் பதவியை அனுபவித்துவிட்டு, இன்று பாஜகவுக்கு உதவாமல் போவது சரியா?" என்றும் கேட்டிருந்தார்.

 இலை தலை

இலை தலை

இதுபோலவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பினர் மேலும் சில கருத்துக்களை சொன்னார்கள்.. "பாஜக மேலிட ஆதரவு அதிகமாக ஓபிஎஸ் டீமுக்கு அதிகமாக கிடைத்து கொண்டிருக்கிறது.. அதிலும், தமிழகத்தின் பாஜக பொறுப்பாளரே, ஓபிஎஸ்ஸுக்குதான் சப்போர்ட் செய்துவருகிறார்.. அதேபோல, எப்படியும், இரட்டை இலை தங்களுக்குதான் கிடைக்க போகிறது என்பதிலும் எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.. ஆக, பாஜக சொல்வதை கேட்கும் நிலையில்தான் எடப்பாடி தரப்பு உள்ளதே தவிர, எடப்பாடி சொல்லும் ஐடியாக்களை காது கொடுக்கும் கேட்கும் நிலைமையில் பாஜக இல்லை" என்று கூறியிருந்தனர்.

 ஹைஜாக்

ஹைஜாக்

ஆனால், இவ்வளவு கணக்குகளும் தற்போது நொறுங்கிவிட்டதாகவே தெரிகிறது.. அதிமுக என்ற கட்சி 95 சதவீதம் தனக்கு உள்ளதாகவே கூறப்பட்டு வந்தநிலையில், ஒற்றை தலைமை விவகாரத்திலும் உறுதியாக நின்றார் எடப்பாடி.. ஆனால், அதிமுகவுக்கு பிரதான தலைமை இருப்பதை பாஜக விரும்பாத நிலையில், எடப்பாடிக்கான ஆதரவை இதுநாள் வரை தராமலேயே இருந்தது. மாறாக, ஓபிஎஸ்ஸுக்கு பல வழிகளில் மறைமுகமான ஆதரவையும் தந்து வந்தது.. மேற்கண்டவாறு, ஓபிஎஸ் ஆதரவாளர்களே சொல்லும் அளவுக்குதான், ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் தூக்கி பிடித்தது.

 நழுவிடுச்சே

நழுவிடுச்சே

ஆனால், ஓபிஎஸ் அவைகளை சரியாக பயன்படுத்தி கொண்டாரா? என்பதுதான் சந்தேகமாக அதிமுகவில் எழுந்துள்ளது.. ஆரம்பத்தில் ஒருசிலர் ஓபிஎஸ் பக்கமிருந்து திமுகவுக்கு தாவியபோதுகூட, எடப்பாடி தரப்பில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு ஓபிஎஸ் வலை விரிப்பதாகவும், விரைவில் அவர்கள் இணைந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. ஆனால், இப்போது வரை யாருமே அப்படி எடப்பாடி தரப்பில் இருந்து செல்லவில்லை. மாறாக, கோவை செல்வராஜ் போன்ற முக்கிய நபர்தான் விலகி வந்துள்ளார். மிகப்பெரிய பேச்சாளரும், சீனியரும், கொங்கு மண்டல நிர்வாகியுமான கோவை செல்வராஜ்ஜை, ஓபிஎஸ் நழுவவிட்டது, அவரது சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

பயமுறுத்தல்

பயமுறுத்தல்

எடப்பாடிக்கு நிகரான ஆதரவுகள் ஓபிஎஸ்ஸுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு ஆதரவு என்பது நிச்சயம் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது.. தென்மண்டலத்தில், முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை அள்ளும் சக்தியும் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கவே செய்கிறது.. அதிமுக என்ற கட்சியில் இருந்து பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஓபிஎஸ் இருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றாலும், பாஜக காட்டிய எந்த பயமுறுத்தலுக்கும் எடப்பாடி அசராமல் நின்றதையும் கவனிக்க வேண்டி உள்ளது. அதனால்தானோ, இன்று "இடைக்கால பொதுச்செயலாளர்" என்று அழைப்பிதழை டெல்லி நீட்டி வரவேற்றுள்ளது.

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

ஒருங்கிணைந்த அதிமுக என்ற விருப்பத்தை பாஜக பலமுறை முன்வைத்தும், அதை எடப்பாடி தொடர்ந்து மறுத்த நிலையில், கடைசியில் எடப்பாடியின் பிடிவாதம்தான் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது.. இதை தங்களுக்கான அதிகாரமாக நினைத்து அதிமுகவினரே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இன்று மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில், " அதிமுக வலிமையாக இருக்கிறது என்பதற்கு, ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பாக அழைக்கப்பட்டுள்ளார்.. இது நமக்கு கிடைத்திருக்கிற பெரிய அங்கீகாரம்.. ஏன் என்றால், நம்மை மட்டும்தான் அழைத்திருக்கிறார்கள்.. இது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும்" என்று கூறியுள்ளார்.

 கசப்புகள்

கசப்புகள்

அதாவது, தருமர், ரவீந்திரநாத் போன்ற எம்பிக்கள் ஓபிஎஸ் சார்பாக டெல்லியில் இருக்கும் நிலையில், அந்த முறையிலும் சரி, எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற முறையிலும் சரி, ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை. இதைதான் செங்கோட்டையன் பிரத்யேகமாக சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது. ஆக, 6 மாத காலமாகவே பல்வேறு கசப்புகள் வெளிவந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தையும் தாண்டி, பாஜக தற்போது நெருங்கி வந்துள்ளதாகவே தெரிகிறது.. எவ்வளவுதான் மறைமுக அழுத்தங்களை தந்தாலும், எடப்பாடியை பாஜகவால் தவிர்க்க முடியாது என்பதே உண்மை போலும்..!!

English summary
Can't OPS do politics against Edappadi Palaniswami and Will 2nd Dharmyutham help him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X