Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடநாடு டு ‘சேலம்’ கனெக்‌ஷன்.. துருப்பாக இருக்கும் 2 புள்ளிகள்.. இறுகும் பிடி.. சிக்கலில் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், அதேவேகத்தில் கோடநாடு விசாரணையும் சிபிசிஐடியால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஈபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணதாபா, கனகராஜ் வீடுகளில் விசாரணை நடைபெற உள்ளது.

சேலத்திற்குச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், சிபிசிஐடி விசாரணையின் பிடி இறுகுவதால் ஈபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கோடநாடு மர்மம்

கோடநாடு மர்மம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்கு உள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திகில் சம்பவங்கள்

திகில் சம்பவங்கள்

இப்படி அடுத்தடுத்து நடந்த திகில் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. எனினும், கோடநாடு வழக்கு விசாரணை கடந்த ஆட்சியில் மெதுவாக நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு மீண்டும் வேகமெடுத்தது. சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி கையில்

சிபிசிஐடி கையில்

இந்தநிலையில், வழக்கை கடந்த மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது தொடர்பான வாக்குமூலங்கள், விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி, சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான அதிகாரிகள் கோடநாடு எஸ்டேட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

ஷகில் அக்தர்

ஷகில் அக்தர்

சிபிசிஐடி டி.ஜி.பி ஷகில் அக்தர், ஐ.ஜி தேன்மொழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கோடநாடு எஸ்டேட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், எஸ்டேட் மேலாளர் நடராஜ், பணியாளர்கள், சம்பவம் நடந்த நாள் அன்று பணியில் இருந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

நேபாளம்

நேபாளம்

இந்த விசாரணையின்போது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று இரவு கிருஷ்ணதாபா, ஓம்பகதூர் ஆகிய 2 பேரும் காவல் பணியில் இருந்த நிலையில் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், கிருஷ்ணதாபா அங்கிருந்து தப்பியதும் தெரியவந்துள்ளது. தற்போது கிருஷ்ணதாபா குடும்பத்துடன் நேபாளம் நாட்டில் வசித்து வருவதை போலீசார் உறுதி செய்ததை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நேபாளம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேலம் செல்லும் சிபிசிஐடி

சேலம் செல்லும் சிபிசிஐடி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று விசாரிக்க உள்ளதாகவும், கனகராஜ் கார் விபத்து தொடர்பாக சேலத்தில் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஈபிஎஸ் சொல்லித்தான்

ஈபிஎஸ் சொல்லித்தான்


கோடநாடு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சயான், விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கனகராஜ், ஆவணங்களை திருட திட்டம் தீட்டியதாக சயான் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான சேலம் இளங்கோவனின் பெயரும் அடிபட்டு வருகிறது. இதனால், கோடநாடு வழக்கில் 'சேலம்' தொடர்பு அதிகமாக இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

இறுகும் பிடி

இறுகும் பிடி

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஈபிஎஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், கோடநாடு வழக்கிலும் சிபிசிஐடி போலீசாரின் பிடி இறுகி வருவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 புள்ளிகள்

2 புள்ளிகள்

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இரண்டு கொங்கு மண்டல புள்ளிகள், ஊழல் வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்யவில்லை என அதிருப்தியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூலம் கோடநாடு வழக்கில் முக்கிய துருப்புகள் கிடைக்குமா என்ற நோக்கிலும் அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி கவலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+