சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. எம்ஜிஆர்னு இருந்தா நம்பியார் வேணுமே.. "புதஎம்ஜிஆர்மரநி"வுக்கு போட்டியாக வந்த கோகோச்!!

Google Oneindia Tamil News

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சமீபத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் (வாய் வலிக்காமல் இருக்க சுருக்கமாக - புதஎம்ஜிஆர்மரநி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பெயரில் ஒரு எழுத்து அதிகமாக இருந்திருந்தால் மிக நீளமான ரயில் நிலையம் என்ற பெயரை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றிருக்கும். உலக சாதனைகள் வெவ்வேறு விதங்களில் நிகழ்த்தப் படுகின்றன. அவற்றில் ஒன்று மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம்.

வேல்ஸ் நாட்டில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தின் பெயர் Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch இந்த ரயில் நிலையம் வேல்ஸ் நாட்டில் ஆங்க்லஸ் என்னும் தீவில் உள்ளது.

போற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போலயே..!போற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போலயே..!

ஒரு எழுத்து குறைவு

இந்த ரயில் நிலையத்தின் பெயரில் மொத்தம் 58 எழுத்துகள் உள்ளன. உலகின் அதிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை இந்த ரயில் நிலையம் பெற்றுள்ளது. இந்த பெருமையை நமது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் சமன் செய்து இருக்கும் ஒரே ஒரு எழுத்து மட்டும் கூடுதலாக எழுதப் பட்டிருந்தால்.

சென்டிரல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் சமீபத்தில்தான் மாற்றப்பட்டது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதனையடுத்து தமிழக அரசின் அரசிதழிலும் இந்த பெயர் மாற்றம் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அவசரம் அவசரமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சர்ச்சை மாற்றம்

இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டபோதே இதில் சென்னை இல்லை என்ற சர்ச்சையும் சேர்ந்தே எழுந்தது. இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் மொத்தம் 57 எழுத்துகள் இடம் பெற்றன. கூடுதலாக ஒரு எழுத்து இடம் பெற்றிருந்தால் வேல்ஸ் ரயில் நிலையத்தின் பெயரை போல முதலிடத்தை நமது ரயில் நிலையமும் பெற்றிருக்கும். அல்லது சென்னை என்ற வார்த்தையை கூடுதலாக சேர்த்து இருந்தால் உலகின் மிக நீளமான ரயில் நிலையம் என்ற பெயரை நமது ரயில் நிலையம் தனதாக்கி இருக்கும். இப்போது ஒரு எழுத்தில் அந்த சாதனையை தவற விட்டு விட்டது.

இதை விட நீளம்

தற்போது இந்தியாவில் அதிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் என்ற பெயரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கிராந்திவீரா சங்கோலி ராயன்னா பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் உள்ளது 3 வது இடத்தில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம் உள்ளது. அதற்கு அடுத்த படியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள வெங்கட நரசிம்ம ராஜுவரி பேட்ட ரயில் நிலையமும் உள்ளது.

சிறப்பு.. மிக மிக சிறப்பு!

English summary
Puratchi Talaivar Dr MGR central railway station @ Chennai Central railway station has missed a World record in just one word.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X